தொடரும் கோலியின் மோசமான ஆட்டம்: நெட்டிசன்கள் விமர்சனம்

தொடரும் கோலியின் மோசமான ஆட்டம்: நெட்டிசன்கள் விமர்சனம்
Updated on
1 min read

சென்னை, சேப்பாக்கம் மைதானத்தில் இங்கிலாந்து அணிக்கு எதிராக இன்று நடைபெறும் 2-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி டாஸ் வென்று பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளார்.

சென்னையில் இதே மைதானத்தில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியை 272 ரன்கள் வித்தியாசத்தில் வென்று இங்கிலாந்து அணி 1-0 என்ற கணக்கில் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முன்னிலையில் இருக்கிறது.

இந்நிலையில் 2-வது டெஸ்ட் போட்டியில் 3 விக்கெட் இழப்புக்கு இந்திய அணி, 130 ரன்களைக் கடந்துள்ளது. கில், புஜாரா, கோலி ஆகியோர் ஆட்டமிழந்துள்ளனர். அதுவும் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பூஜ்ஜியத்தில் ஆட்டமிழந்தார்.

இதன் காரணமாக சமூக வலைதளங்களில் கோலி கடுமையான விமர்சனத்துக்கு உள்ளானார். மேலும், கடைசி பத்துப் போட்டிகளாக கோலியின் ஆட்டம் சிறப்பாக இல்லை என்றும் நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.

அவற்றில் சில பதிவுகள்:

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in