Published : 13 Feb 2021 09:30 AM
Last Updated : 13 Feb 2021 09:30 AM

டாஸ் வென்றார் விராட் கோலி; வாஷிங்டன் சுந்தர், பும்ரா இல்லை: ஆடுகளம் எப்படி?

சென்னை சேப்பாக்கம் மைதான ஆடுகளம்: படம் உதவி |ட்விட்டர்.

சென்னை

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இங்கிலாந்து அணிக்கு எதிராக இன்று நடக்கும் 2-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி டாஸ் வென்று பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளார்.

சென்னையில் இதே மைதானத்தில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியை 272 ரன்கள் வித்தியாசத்தில் வென்று இங்கிலாந்து அணி 1-0 என்ற கணக்கில் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முன்னிலையில் இருக்கிறது.

இந்நிலையில் 2-வது டெஸ்ட் போட்டி இன்று தொடங்குகிறது. இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கான போட்டியில் தொடர்ந்து நிலைத்திருக்க இன்னும் ஒரு வெற்றி கட்டாயமாகும். இந்தப் போட்டியில் வெற்றி பெறாவிட்டால் இந்திய அணியின் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கனவு கலைந்துவிடும்.

இந்த டெஸ்ட் போட்டிக்கு இந்திய அணியில் 3 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு முகமது சிராஜ் சேர்க்கப்பட்டுள்ளார். வாஷிங்டன் சுந்தருக்கு பதிலாக அக்ஸர் படேல், நதீமுக்கு பதிலாக குல்தீப் யாதவ் சேர்க்கப்பட்டுள்ளார். அக்ஸர் படேல் இந்திய டெஸ்ட் அணிக்கு 302-வது வீரராக அறிமுகமாகியுள்ளார்.

இந்திய அணி விவரம்:
ரோஹித் சர்மா, ஷுப்மான் கில், சத்தேஸ்வர் புஜாரா, விராட் கோலி, ரஹானே, ரிஷப் பந்த், அக்ஸர் படேல், ரவிச்சந்திர அஸ்வின், குல்தீப் யாதவ், இசாந்த் சர்மா, முகமது சிராஜ்.

இங்கிலாந்து அணி விவரம்:
ரோரி பர்ன்ஸ், டாம் சிப்ளி, டான் லாரன்ஸ், ஜோ ரூட், பென் ஸ்டோக்ஸ், ஒலே போப், பென் ஃபோக்ஸ், மொயின் அலி, ஸ்டூவர்ட் பிராட், ஒலேஸ்டோன், ஜேக் லீச்.

ஆடுகளம் எப்படி?

முதல் டெஸ்ட் போட்டியில் 3-வது நாளில் இருந்துதான் ஆடுகளத்தில் லேசான பிளவு ஏற்பட்டு பந்து சுழன்றது. ஆனால், 2-வது டெஸ்ட் போட்டிக்கு முதல் நாளில் இருந்தே பந்து சுழலும் வகையில் ஆடுகளம் அமைக்கப்பட்டுள்ளது. ஆடுகளத்தில் அதிகமான பிளவுகள் முதல் நாளில் இருந்தே காணப்படுகின்றன.

ஆதலால், சுழற்பந்துவீச்சாளர்களுக்குக் கூட பந்துகள் நன்றாக பவுன்ஸ் ஆகி சுழலும். வேகப்பந்துவீச்சாளர்களுக்கு எதிர்பார்த்த அளவு ஒத்துழைக்காது. 5 நாட்கள் வரை இந்த டெஸ்ட் போட்டி நீடிப்பது கடினம். அதற்குள் முடிவு கிடைத்துவிடும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x