

ஐஎஸ்எல் கால்பந்து தொடரில் நேற்று கவுகாத்தியில் மும்பை சிட்டி எப்.சி.-நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணிகள் மோதின. இரு அணிகளும் 4-2-3-1 என்ற பார்மட்டில் களமிறங்கின. ஆட்டத்தின் 41வது நிமிடத்தில் நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணிக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. அந்த அணியின் ஹமரா பந்தை கோல் கம்பத்தை நோக்கி கொண்டு சென்றபோது மும்பை அணியின் ராவில்சன் தடுக்க முயன்றார்.
இதில் அவரது கால்பட்டு ஹமரா கீழே விழுந்தார். இதனால் நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணிக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. இதை பயன்படுத்தி அந்த அணியின் ஹேர்ரிரோ கோல் அடித்தார். இதனால் முதல் பாதியில் நார்த் ஈஸ்ட் யுனைடெட் 1-0 என முன்னிலை வகித்தது. 85வது நிமிடத்தில் நார்த் ஈஸ்ட் யுனைடெட் 2வது கோலை அடித்தது. இந்த கோலை ஹமரா அடித்தார். மும்பை அணியால் கடைசி வரை பதில் கோல் அடிக்க முடியவில்லை. முடிவில் நார்த் ஈஸ்ட் யுனைடெட் 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.