Published : 12 Nov 2015 09:28 AM
Last Updated : 12 Nov 2015 09:28 AM

லீக் கைப்பந்து: இரு ஆட்டங்களில் ஐசிஎப் இன்று மோதல்

சென்னை மாவட்ட கைப்பந்து சங்கம் சார்பில் எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகம் ஆதரவுடன் ஏ டிவிசன் லீக் கைப்பந்து போட்டிகள் சென்னையில் நடைபெற்று வருகிறது. எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடைபெற்று வந்த இந்த போட்டிகள் மழை காரணமாக பெரியமேட்டில் உள்ள உள்விளையாட்டரங்கில் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

இன்று காலை நடைபெறும் ஆட்டங்களில் ஐசிப்-எஸ்ஆர்எம், தமிழக காவல்துறை-பனிமலர், ஐஓபி-கலால்துறை, தெற்கு ரயில்வே, வருமான வரி அணிகள் மோதுகின்றன. இப்போட்டிகள் காலை 7 மணிக்கு தொடங்குகிறது. மாலையில் நடைபெறும் போட்டிகளில் எஸ்ஆர்எம்-பனிமலர், ஐசிஎப்-ஐஓபி, தெற்கு ரயில்வே-கலால் துறை, வருமானவரி-இந்தியன் வங்கி அணிகள் மோதுகின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x