Published : 23 Jun 2014 05:00 PM
Last Updated : 23 Jun 2014 05:00 PM

ஆஸ்திரேலியாவில் 4 டெஸ்ட், முத்தரப்பு ஒருநாள் தொடரில் விளையாடும் இந்தியா

2015ஆம் ஆண்டு உலகக் கோப்பைக்கு முன் ஆஸ்திரேலியாவில் 4 டெஸ்ட் மற்றும் இங்கிலாந்து பங்குபெறும் முத்தரப்பு ஒருநாள் தொடரில் இந்தியா விளையாடுகிறது.

இந்த ஆண்டு இறுதியில் இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியா செல்கிறது. டிசம்பர் மாதம் முதல் 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் தொடங்குகிறது.

அதன் பிறகு ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, இந்தியா பங்கேற்கும் முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெறுகிறது. முன்னதாக தென் ஆப்பிரிக்க அணி ஆஸ்திரேலியாவுக்குப் பயணம் மேற்கொண்டு 3 இருபது ஓவர் போட்டிகளிலும் 5 ஒருநாள் போட்டிகளிலும் விளையாடுகிறது.

பிறகு 2015-ல் ஆஸ்திரேலியா, நியூசிலாந்தில் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் ஆரம்பமாகவுள்ளன.

இந்தியா- ஆஸ்திரேலியா கிரிக்கெட் போட்டித் தொடர் அட்டவணை:

நவம்பர் 24-25 - முதல் பயிறி ஆட்டம்

நவம்பர் 28-29 - 2வது பயிற்சி ஆட்டம்

டிசம்பர் 4-8 - முதல் டெஸ்ட், பிரிஸ்பன்

டிசம்பர் 12-16 - 2வது டெஸ்ட், அடிலெய்ட் ஓவல்

டிசம்பர் 26-30 - 3வது டெஸ்ட், மெல்பர்ன்

ஜனவரி 3-7 - 4வது டெஸ்ட், சிட்னி.

முத்தரப்பு ஒருநாள் தொடர்:

ஜனவரி 16: இந்தியா-ஆஸ்திரேலியா, மெல்பர்ன்

ஜனவரி 18: ஆஸ்திரேலியா-இங்கிலாந்து, சிட்னி

ஜனவரி 20: இங்கிலாந்து-இந்தியா, பிரிஸ்பன்

ஜனவரி 23: ஆஸ்திரேலியா-இங்கிலாந்து, ஹோபார்ட்

ஜனவரி 26: ஆஸ்திரேலியா-இந்தியா, சிட்னி

ஜனவரி 30: இங்கிலாந்து-இந்தியா, பெர்த்

பிப்ரவரி 1: இறுதிப்போட்டி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x