

ஏடிபி டூர் பைனல்ஸ் போட்டி லண்டனில் நடைபெற்று வருகிறது. இதில் தரவரிசையில் முதல் 8 இடங்களில் உள்ள வீரர்கள் கலந்து கொண்டுள்ளனர். நேற்று நடைபெற்ற ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் தரவரிசையில் முதலிடத்தில் உள்ள செர்பியாவின் ஜோகோவிக், 3வது இடத்தில் உள்ள சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரருடன் மோதினார். இதில் பெடரர் 7-5, 6-2 என்ற நேர் செட்டில் ஜோகோவிக்கை தோற்கடித்தார்.
இதன் மூலம் ஏடிபி டூர் பைனல்ஸ் போட்டியில் ஜோகோவிக்கின் தொடர்ச்சியான வெற்றிக்கு பெடரர் முற்றுப்புள்ளி வைத்தார். ஏடிபி டூர் பைனல்ஸில் ஜோகோவிக் கடைசியாக நடைபெற்ற 3 தொடர்களை வென்றிருந்தார். மேலும் அவர் தொடர்ச்சியாக 15 ஆட்டங்களில் வெற்றி பெற்றிருந்தார். ஜோகோவிக்கை வீழ்த்திய பெடரர் அரையிறுதிக்கு முன்னேறினார்.