ஐசிஎப் அணிக்கு 2வது வெற்றி

ஐசிஎப் அணிக்கு 2வது வெற்றி
Updated on
1 min read

சென்னை மாவட்ட கைப்பந்து சங்கம் சார்பில் எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகம் ஆதரவுடன் ஏ டிவிசன் லீக் கைப்பந்து போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது.

2வது நாளான நேற்று தமிழக காவல்துறை அணி 25-20, 25-21, 23-25, 25-21 என்ற செட் கணக்கில் தெற்கு ரயில்வே அணியை வீழ்த்தியது.

மற்றொரு ஆட்டத்தில் ஐசிஎப் 24-25, 20-25, 25-20, 25-17, 15-10 என்ற கணக்கில் இந்தியன் வங்கி அணியை வீழ்த்தியது. ஐசிஎப் அணிக்கு இது 2வது வெற்றியாகும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in