

ஊக்க மருந்து சோதனை விவகாரத்தில் ரஷ்யாவில் உள்ள மாஸ்கோ ஆய்வு மையம் முறைகேடு செய்ததாக குற்றச் சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக விசாரணை நடத்த சர்வதேச ஊக்கமருந்து தடுப்பு மையத்தின் (டபிள்யூஏடிஏ) முன்னாள் தலைவரும் கனடா நாட்டு வழக்கறி ஞருமான ரிச்சர்டு பவுண்டு தலைமையில் 3 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. இந்த குழு 335 பக்கங்கள் கொண்ட அறிக்கையை சர்வதேச தடகள கூட்டமைப்பிடம் வழங்கியது.
இந்நிலையில் சர்வதேச தடகள கூட்டமைப்பின் 201-வது கூட்டம் தலைவர் செபாஸ்டியன் கோ தலைமையில் லண்டனில் டெலி கான்பரன்ஸிங் மூலம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில், ஊக்க மருந்து சோதனை விவகாரத்தில் ரஷ்ய தடகள சங்கத்தை சஸ்பெண்ட் செய்வது தொடர்பாக வாக்கெடுப்பு நடத்தப் பட்டது. மொத்தம் உள்ள 24 உறுப்பினர்களில் வாக்கெடுப் புக்கு ஆதரவாக 22 ஓட்டும் எதிராக ஒரு ஓட்டும் விழுந்தது. ரஷ்யா ஓட்டளிக்க அனுமதிக்கப் படவில்லை.
வாக்கெடுப்பு அடிப்படையில் ரஷ்ய தடகள சங்கத்தை சஸ் பெண்ட் செய்து சர்வதேச தடகள கூட்டமைப்பு உத்தரவிட்டுள்ளது. இதனால் அடுத்த ஆண்டு ரியோ டி ஜெனீரோவில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டி, உலக ஷாம்பியன்ஷிப் உள்ளிட்ட எந்த போட்டிகளிலும் ரஷ்ய தடகள வீரர்கள் பங்கேற்க முடியாது. மேலும் எவ்விதமான சர்வதேச தடகளப் போட்டிகளையும் ரஷ்யா நடத்த முடியாது என்று சர்வதேச தடகள கூட்டமைப்பு தலைவர் செபாஸ்ட்டியன் கோ தெரிவித்தார்.