Last Updated : 21 Jan, 2021 03:14 AM

 

Published : 21 Jan 2021 03:14 AM
Last Updated : 21 Jan 2021 03:14 AM

விளையாட்டாய் சில கதைகள்: கரைசேர்த்த பயிற்சியாளர்

முன்னணி வீரர்களின் காயம், 3 டெஸ்ட் போட்டிகளில் விராட் கோலி விலகல், முதல் டெஸ்ட் போட்டியில் படுதோல்வி என பல சிக்கல்கள் இருந்தாலும், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கிரிக்கெட் தொடரில் இந்திய அணி ஓரளவு கவுரவமான நிலையை எட்டியதில் பயிற்சியாளர் ரவி சாஸ்திரியின் பங்கும் முக்கியம். கண்ணுக்கு தெரியாத அஸ்திவாரமாய் இருந்து, இந்திய அணியை கரைசேர்த்த ரவி சாஸ்திரியைப் பற்றி தெரிந்துகொள்வோம்:

1962-ம் ஆண்டு மும்பையில் பிறந்த ரவி சாஸ்திரி, 14 வயது முதல் கிரிக்கெட் போட்டிகளில் தீவிரமாக பங்கேற்கத் தொடங்கினார். ஆரம்ப கட்டத்தில் தான் படித்த டான் பாஸ்கோ பள்ளிக்காக ரவி சாஸ்திரி கிரிக்கெட் போட்டிகளில் ஆடினார். அவரது தலைமையில் டான் பாஸ்கோ பள்ளி, 1976-ம் ஆண்டில் மும்பையில் நடந்த பள்ளிகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டியின் இறுதிச் சுற்றை எட்டியது.

1981-ம் ஆண்டு இந்திய அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது, கல்லூரி மாணவரான ரவி சாஸ்திரியை மாற்று வீரராக அழைத்துச் சென்றனர். இத்தொடரில் முன்னணி சுழற்பந்து வீச்சாளரான திலிப் ஜோஷிக்கு காயம் ஏற்பட, ரவி சாஸ்திரிக்கு அணியில் வாய்ப்பு கிடைத்தது. சுழற்பந்து வீச்சாளரான ரவி சாஸ்திரிக்கு முதலில் பேட்டிங் வராது. 10-வது பேட்ஸ்மேனாகத்தான் அவர் களம் இறங்குவார். ஆனால் இதன்பிறகு பேட்டிங்கில் தீவிர கவனம் செலுத்திய ரவி சாஸ்திரி, ஒரு கட்டத்தில் இந்தியாவின் தொடக்க ஆட்டக்காரராக மாறினார்.

80 டெஸ்ட் போட்டிகளில் ஆடியுள்ள ரவி சாஸ்திரி, 3,830 ரன்களைக் குவித்துள்ளார். அதே நேரத்தில் 150 ஒருநாள் போட்டிகளில் 4 சதங்கள் உட்பட 3,108 ரன்களைக் குவித்துள்ளார். அத்துடன் டெஸ்ட் போட்டிகளில் 151 விக்கெட்களையும், ஒருநாள் போட்டிகளில் 129 விக்கெட்களையும் வீழ்த்தி கபில்தேவுக்கு அடுத்து இந்தியாவின் சிறந்த ஆல் ரவுண்டராக தன்னை நிரூபித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x