டென்மார்க் ஓபன்: ஸ்ரீகாந்த், பிரணாய் தோல்வி

டென்மார்க் ஓபன்: ஸ்ரீகாந்த், பிரணாய் தோல்வி
Updated on
1 min read

டென்மார்க் ஓபன் சூப்பர் சீரிஸ் பாட்மிண்டன் போட்டியின் ஒற்றையர் 2-வது சுற்றில் இந்தியாவின் ஸ்ரீகாந்த், எச்.எஸ்.பிரணாய் ஆகியோர் தோல்வி கண்டு வெளியேறினர்.

டென்மார்க்கின் ஓடென்ஸ் நகரில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் நேற்று நடந்த 2-வது சுற்றில் ஸ்ரீகாந்த் 15-21, 17-21 என்ற நேர் செட்களில் இந்தோனேசியாவின் டாமி சுகியார்த்தோவிடம் தோல்வி கண்டார். மற்றொரு ஆட்டத்தில் எச்.எஸ்.பிரணாய் 21-23, 21-19, 15-21 என்ற செட் கணக்கில் சீன தைபேவின் சூ ஜென் ஹாவிடம் தோல்வி கண்டார்.

ஆடவர் இரட்டையர் பிரிவு 2-வது சுற்றில் இந்தியாவின் மானு அத்ரி-சுமீத் ரெட்டி ஜோடி 19-21, 22-20, 19-21 என்ற செட் கணக்கில் போட்டித் தரவரிசையில் 8-வது இடத்தில் உள்ள சீன தைபேவின் லீ ஷெங்-சாய் சியா ஷின் ஜோடியிடம் தோல்வி கண்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in