

வரும் டிசம்பர் மாதம் இறுதியில் ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் 14 வயதுக்குட்பட்டோருக்கான தேசிய ஹாக்கி போட்டி நடைபெற உள்ளது. இதில் பங்கேற்கும் தமிழக அணி தேர்வு நேற்று அரியலூர் மான்ட்போர்ட் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடை பெற்றது.
அரியலூர் மாவட்ட உடற் கல்வித் துறை சார்பில் நடைபெற்ற இந்த தேர்வு நிகழ்வில் மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் சந்திரன், மான்ட்போர்ட் பள்ளி முதல்வர் டோமினிக் சாவியோ மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள் பங்கேற் றனர்.
தமிழக ஹாக்கி அணி விவரம்:
முகமது இஷான்கான், விஷ்ணு பிரசாந்த், விக்னேஷ் (விழுப்புரம்), ரவிக்குமார், கவுசிக்ராஜ் (விருதுநகர்), திலீபன் செல்வ ரத்தினம், மாதவன் (அரியலூர்), விவேக் ஆனந்த், அஸ்வின்குமார் (திருநெல்வேலி), சேதுராமன் (புதுக்கோட்டை), ரவீந்திரன் (ஈரோடு), நாகரோஹித், துளசல் குமார் (சென்னை), ராமதாஸ் (சிவகங்கை), சஞ்செய் (திருவள் ளூர்), ராகுல்(திண்டுக்கல்), பவித் ரன்(மதுரை), ஜெபின் (கோவில்பட்டி).