Published : 19 Jan 2021 18:14 pm

Updated : 19 Jan 2021 18:14 pm

 

Published : 19 Jan 2021 06:14 PM
Last Updated : 19 Jan 2021 06:14 PM

அடிலெய்ட் தோல்விக்குப் பின் இந்திய அணியைக் குறைத்து மதிப்பிட்டவர்களுக்கு பதிலடி: கிரிக்கெட் பிரபலங்கள் வாழ்த்து

one-for-the-ages-from-pm-to-pichai-a-standing-ovation-for-india-s-wounded-warriors
பிரிஸ்பேன் மைதானத்தில் இந்திய அணி வலம்வந்தபோது வாழ்த்து தெரிவித்த இந்திய ரசிகர்கள்: படம் உதவி | ட்விட்டர்.

புதுடெல்லி

அடிலெய்ட் தோல்விக்குப் பின் இந்திய அணியின் திறமையைக் குறைத்து மதிப்பிட்டவர்களுக்கு டெஸ்ட் தொடரை வென்று நிமிர்ந்து நின்று இந்திய அணி பதிலடி கொடுத்துள்ளது என முன்னாள் வீரர்கள், கிரிக்கெட் பிரபலங்கள் இந்திய அணிக்குப் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

பிரிஸ்பேனில் நடந்த கடைசி மற்றும் 4-வது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணியை 3 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வென்று டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் 2-வது முறையாகக் கைப்பற்றியது.


இந்திய அணியின் வெற்றி குறித்து கிரிக்கெட் பிரபலங்கள் ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

சச்சின் டெண்டுல்கர்:

இந்திய அணியில் உள்ள ஒவ்வொரு வீரரும் பொறுப்புணர்வுடன் விளையாடி, டெஸ்ட் தொடர் வெற்றியைப் பெற்றுக் கொடுத்துள்ளார்கள். ஒவ்வொரு முறையும் நாம் வெல்லும்போதும், நிலைத்து நிற்கிறோம், விஸ்வரூபமெடுக்கிறோம். நாம் களத்தில் அச்சமின்றி, நம்பிக்கையை ஏற்படுத்த அடிக்கும் பவுண்டரிகள், கவனமற்ற கிரிக்கெட் அல்ல. காயங்கள், நிலையற்ற தன்மையை நாம் நம்பிக்கையால் சிதைத்துள்ளோம். சிறந்த டெஸ்ட் தொடர் வெற்றி. இந்திய அணிக்கு வாழ்த்துகள்.

விராட் கோலி

என்ன ஒரு அற்புதமான வெற்றி. அடிலெய்ட் தோல்விக்குப் பின் இந்திய அணியின் திறமையை ஒவ்வொருவரும் சந்தேகித்தார்கள். இப்போது நிமிர்ந்து நின்று அனைவரையும் பார்க்க வைத்துள்ளோம். மனோதிடம், உறுதியான தீர்மானம்தான் சிறந்த பங்களிப்புக்குக் காரணம். சிறப்பாகச் செயல்பட்ட வீரர்கள், நிர்வாகத்துக்குப் பாராட்டுகள். வெற்றியைக் கொண்டாடுங்கள்.

விவிஎஸ் லக்ஷ்மண்:

ரஹானே மிகச் சிறப்பாக அணியை வழிநடத்தியுள்ளார். இளைஞர்களுக்கு இந்த வெற்றி அதிகமான நம்பிக்கையை அளித்துள்ளது. இளைஞர்களின் பந்துவீச்சை மறக்க முடியாது. இந்திய அணி அருமையாக விளையாடியது.

வீரேந்திர சேவாக் :

இதுதான் புதிய இந்தியா. அடிலெய்டில் நடந்ததற்குப் பின் இப்போது நமக்கு வாழ்நாள் மகிழ்ச்சியை இளம் வீரர்கள் அளித்துள்ளார்கள். உலகக் கோப்பை வெற்றியை விட இது சிறப்பு வாய்ந்தது. இதில் ரிஷப் பந்த்தின் ஆட்டம் கூடுதல் சிறப்பு.

இசாந்த் சர்மா:

சாம்பியன்ஸ் இந்தியா. மிகப்பெரிய சேஸிங்கைச் செய்துள்ளது. அணியின் கூட்டு முயற்சி, போராடும் குணம், துணிச்சல், விடாமுயற்சி ஆகியவற்றை இந்திய அணி நிரூபித்துவிட்டது. சாதிக்க முடியும் என்பதை நிரூபித்துவிட்டது இந்திய அணி. அதனால்தான் ஒவ்வொரு முறையும், தேசியக் கொடியுடன் விளையாடி வெற்றிக்குப் பின் பறக்க விடுகிறோம்.

முகமது ஷமி

இந்திய அணிக்கு வாழ்த்துகள். சிறப்பாக ஆடிய வீரர்களுக்கும் வாழ்த்துகள்.

ஸ்ரேயாஸ் அய்யர்:

என்ன மாதிரியான அணி, சாம்பியன்ஸ். வரலாற்றுத் தருணம். வரலாற்று நாள், வரலாற்றுத் தொடர். இந்திய அணியைப் பார்த்துப் பெருமைப்படுகிறேன்.

ஹர்பஜன் சிங்

ரஹானேவுக்கு எனது பாராட்டுகள். என்னைப் பொறுத்தவரை இது மிகப்பெரிய வெற்றி. முக்கிய வீரர்கள் இல்லாமல் இந்திய அணி தொடரை வென்றதற்கு வாழ்த்துகள்.

ஸ்டூவர்ட் பிராட் (இங்கி)

டெஸ்ட் கிரிக்கெட்டின் இதயம் வேகமாகத் துடிக்கிறது. மிக அற்புதமான வெற்றி. இந்தத் தொடரைப் பார்க்கவே அற்புதமாக இருந்தது. கடந்த 1988லிருந்து ஆஸி. அணி காபாவில் தோல்வி அடைந்தது இல்லை.

டிவில்லியர்ஸ்:

என்ன அற்புதமான போட்டி. இந்திய அணியின் திறமையின் ஆழம் பயமாக இருக்கிறது. ரிஷப் பந்த் சிறப்பாக ஆடினார்.

ஷேன் வார்ன்

வாழ்த்துகள் இந்திய அணி. ஆஸ்திரேலிய மண்ணில் நான் நினைவில் கொள்ளக்கூடிய மிகச்சிறந்த டெஸ்ட் தொடர் வெற்றிகளில் ஒன்றாக இது இருக்கும். 36 ரன்களில் இந்திய அணி ஆல் அவுட், பல வீரர்கள் காயத்தால் வெளியேற்றம். இந்தச் சம்பவங்களுக்குப் பின் இந்திய அணியினர் போராட்ட குணத்தையும், விடாமுயற்சியையும், துணிச்சலையும், நம்பிக்கையையும் வெளிப்படுத்தியுள்ளார்கள். ரவிசாஸ்திரி, ரஹானே அற்புதம்.

இவ்வாறு பாராட்டுகளைத் தெரிவித்துள்ளனர்.

தவறவிடாதீர்!PM to PichaIndia's wounded warriorsSachin TendulkarCricket fraternityNotable personalities.இந்திய அணிக்குப் பாராட்டுபிரிஸ்பேன் வெற்றிஆஸி. தோல்விஇந்திய அணி டெஸ்ட் தொடரை வென்றது

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x