8 முன்னணி வீராங்கனைகள் பங்கேற்கும் மகளிர் டென்னிஸ் சாம்பியன்ஷிப்: சிங்கப்பூரில் இன்று தொடக்கம்

8 முன்னணி வீராங்கனைகள் பங்கேற்கும் மகளிர் டென்னிஸ் சாம்பியன்ஷிப்: சிங்கப்பூரில் இன்று தொடக்கம்
Updated on
1 min read

டபிள்யூடிஏ பைனல்ஸ் என்று அழைக்கப்படும் மகளிர் டென் னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி சிங்கப்பூரில் இன்று தொடங்குகிறது. இதில் ஒற்றையர் பிரிவில் உலகின் 8 முன்னணி வீராங்கனைகளும், இரட்டையர் பிரிவில் உலகின் 8 முன்னணி ஜோடிகளும் பங்கேற்கிறார்கள்.

ஒற்றையர் பிரிவில ருமேனியா வின் சைமோனா ஹேலப், போட்டித் தரவரிசையில் முதலிடத்தில் உள்ளார்.

நவம்பர் 1-ம் தேதி வரை இந்தப் போட்டி நடைபெறுகிறது. இதில் ஒற்றையர், இரட்டையர் என இரு பிரிவுகளிலும் இடம்பெற்றுள்ள வீராங்கனைகள் சிவப்பு அணி, வெள்ளை அணி என பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளனர். இந்தப் போட்டி ரவுண்டு ராபின் முறையில் நடைபெறுகிறது.

ஒற்றையர் பிரிவைப் பொறுத்த வரையில் சிவப்பு அணியில் சைமோனா ஹேலப் (ருமேனியா), மரியா ஷரபோவா (ரஷ்யா), அக்னீஸ்கா ரத்வன்ஸ்கா (போலந்து), பிளேவியா பென் னட்டா (இத்தாலி) ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். வெள்ளை அணியில் கார்பைன் முகுருஸா (ஸ்பெயின்), பெட்ரா விட்டோவா (செக்.குடியரசு), ஏஞ்ஜெலிக் கெர்பர் (ஜெர்மனி), லூஸி சபரோவா (செக்.குடியரசு) ஆகி யோர் இடம்பெற்றுள்ளனர்.

இரட்டையர் பிரிவைப் பொறுத்த வரையில் சிவப்பு அணியில் உலகின் முதல் நிலை ஜோடியான இந்தியாவின் சானியா மிர்சா-ஸ்விட்சர்லாந்தின் மார்ட்டினா ஹிங்கிஸ், ஹங்கேரியின் டிமியா பேபஸ்-பிரான்ஸின் கிறிஸ்டினா மெடினோவிக், அமெரிக்காவின் ரகேல் ஹோப்ஸ் ஜோன்ஸ்-அபிகெய்ல் ஸ்பியர்ஸ், செக்.குடியரசின் ஆண்ட்ரியா லவகோவா-லூஸி ரடேக்கா ஆகிய ஜோடிகள் இடம்பெற்றுள்ளன.

வெள்ளை அணியில் அமெரிக் காவின் பெத்தானி மடேக் சேன்ட்ஸ்-செக்.குடியரசின் லூஸி சபரோவா, சீன தைபேவின் சான் ஹாவ் சின்-சான் யூங் ஜான் சகோதரிகள், பிரான்ஸின் கரோலின் கிரேஸியா-ஸ்லோவேனியாவின் கேத்தரினா போட்னிக், ஸ்பெயினின் கார்பைன் முகுருஸா-சுவாரெஸ் நவரோவா ஆகிய ஜோடிகள் இடம்பெற்றுள்ளன.

நடப்பு சாம்பியனான சானியா-ஹிங்கிஸ் ஜோடி, இந்த ஆண்டில் இரு கிராண்ட்ஸ்லாம் போட்டி களில் (விம்பிள்டன், அமெரிக்க ஓபன்) சாம்பியன் பட்டம் வென் றுள்ளதோடு, 8 டபிள்யூடிஏ போட்டிகளிலும் வாகை சூடியுள் ளது. தொடர்ச்சியாக அசத்தி வரும் சானியா-ஹிங்கிஸ் ஜோடி இந்தப் போட்டியிலும் சாம்பியன் பட்டம் வெல்ல அதிக வாய்ப்புள்ளது. அதனால் அந்த ஜோடியின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in