பிரிஸ்பேன் டெஸ்ட்: ஆஸி. அணியிலிருந்து இளம் வீரர் விலகல்: ஹாரிஸ் சேர்ப்பு

மார்கஸ் ஹாரிஸ் : கோப்புப்படம்
மார்கஸ் ஹாரிஸ் : கோப்புப்படம்
Updated on
1 min read


பிரிஸ்பேனில் நாளை தொடங்க இருக்கும் இந்திய அணிக்கு எதிரான கடைசி மற்றும் 4-வது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியஅணியிலிருந்து இளம் வீரர் வில் புகோவ்ஸ்கி காயம் காரணமாக விலகியுள்ளார். அவருக்கு பதிலாக மார்கஸ் ஹாரிஸ் சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்தியா- ஆஸித்திரேலிய அணிகளுக்கு இடையே 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடந்து வருகிறது. இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்று 1-1 என்று சமநிலையில் இருக்கின்றன. இந்நிலையில் வெற்றியாளரை முடிவு செய்யும் 4-வது டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் நாளை தொடங்குகிறது.

இந்திய அணியில் முக்கிய வீரர்கள் பலர் காயத்தால் அவதிப்பட்டு அணியிலிருந்து விலகியுள்ளனர். இதனால் நாளைய போட்டியில் எந்தெந்த வீரர்கள் விளையாடுவார்கள் என்பது பெரும் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

அதேபோலஆஸ்திரேலிய அணியில் அறிமுக வீரர் வில் புகோவ்க்ஸி காயத்தால் விலகியுள்ளார். அவருக்குபதிலாக ஹாரிஸ் சேர்க்கப்பட்டுள்ளார்.

வில் புகோவ்ஸ்கி
வில் புகோவ்ஸ்கி

இதுகுறித்து ஆஸி.கேப்டன் டிம் பெய்ன் நிருபர்களுக்கு இன்று அளித்த பேட்டியில் கூறுகையில் “ வில் புகோவ்ஸ்கி கடந்த சிட்னி டெஸட் போட்டியின்போது பீ்ல்டிங் செய்தபோது தோள்பட்டையில் காயம் அடைந்தார். அவருக்கு காயம் முழுமையாக குணமடையவி்ல்லை என்பதால், பிரிஸ்பேன் டெஸ்டில் அவர் விளையாடமாட்டார். அவருக்கு பதிலாக மார்கஸ் ஹாரிஸ் களமிறங்குவார். இந்த தொடர் முழுவதும் ஹாரிஸ் ஆஸி அணியுடன் இருக்கிறார். ஆனால், விளையாடவில்லை. இந்த முறை வாய்ப்பு பெறுகிறார்” எனத் தெரிவித்தார்.

கடைசியாக கடந்த ஆண்டு ஆஷஸ் தொடரில் ஆஸ்திரேலிய அணியில் இடம் பெற்று ஹாரிஸ் விளையாடினார். அதன்பின் இப்போதுதான் வாய்ப்பு பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆஸி.விளையாடும் 11 பேர் கொண்டஅ ணி
டிம் பெய்ன்(கேப்டன்), டேவிட் வார்னர், மார்கஸ் ஹாரிஸ், மார்னஸ் லாபுஷேன், ஸ்டீவ் ஸ்மித், மாத்யூ வேட், கேமரூன் க்ரீன், பாட் கம்மின்ஸ், மிட்ஷெல் ஸ்டார்க், நாதன்லேயான், ஜோஷ் ஹேசல்வுட்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in