

சீன ஓபன் டென்னிஸ் போட்டியின் மகளிர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சானியா மிர்சா-ஸ்விட்சர்லாந்தின் மார்ட்டினா ஹிங்கிஸ் ஜோடி இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளது.
சீன தலைநகர் பெய்ஜிங்கில் நடைபெற்று வரும் இந்தப் போட்டி யில் நேற்று நடைபெற்ற அரை யிறுதியில் சானியா-ஹிங்கிஸ் ஜோடி 6-2, 6-3 என்ற நேர் செட்களில் சீனாவின் சென் லியாங்-யாபன் வாங் ஜோடியைத் தோற்கடித்தது. ஆரம்பம் முதலே அபாரமாக ஆடிய சானியா ஜோடி, இந்தப் போட்டியை 1 மணி, 7 நிமிடங்களில் முடிவுக்கு கொண்டு வந்தது. இதில் கிடைத்த 9 பிரேக் பாயிண்ட் வாய்ப்புகளில் 5-ஐ சானியா ஜோடி பயன்படுத்திக் கொண்டது.
நடப்பு விம்பிள்டன் மற்றும் அமெரிக்க ஓபன் சாம்பியன்களான சானியா-ஹிங்கிஸ் ஜோடி, சீன ஓபன் இறுதிப் போட்டியில் வெல்லும்பட்சத்தில் இந்த சீசனில் வென்ற 8-வது இரட்டையர் பட்டமாக இது அமையும்.
சானியா மிர்சா தொடர்ந்து 4-வது முறையாக சீன ஓபனில் இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள் ளார். இதற்கு முன்னர் 2013-ல் ஜிம்பாப்வேயின் காரா பிளாக்குடன் இணைந்து சீன ஓபனில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார் சானியா.