புதிய மைல்கல்லை எட்டிய புஜாரா: 11-வது இந்தியர் எனும் சாதனை

சத்தேஸ்வர் புஜாரா : படம் உதவி ட்விட்டர்
சத்தேஸ்வர் புஜாரா : படம் உதவி ட்விட்டர்
Updated on
1 min read


இந்திய அணி வீரர் சத்தேஸ்வர் புஜாரா டெஸ்ட் கிரிக்கெட்டில் 6 ஆயிரம் ரன்களை எட்டி இன்று முக்கிய மைல்கல்லை எட்டினார். இந்த சாதனையைச் செய்த 11-வது இந்திய வீரர் எனும் பெருமையைப் பெற்றார்.

சிட்னியில் இந்தியா, ஆஸி அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி நடந்து வருகிறது. ஆஸி. அணி முதல் இன்னிங்ஸில் 338 ரன்களுக்கும், இந்திய அணி 244ரன்களுக்கும் ஆட்டமிழந்தன. 94 ரன்கள் முன்னிலை பெற்று 2-வது இன்னிங்ஸை ஆடிய ஆஸி. அணி 6 விக்கெட் இழப்புக்கு 312 ரன்கள் சேர்த்து டிக்ளேர் செய்தது.

407 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் கடினமான இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி ேநற்றைய 4-வது நாள் ஆட்டநேர முடிவில், 2 விக்கெட் இழப்புக்கு 98 ரன்கள் சேர்த்திருந்தது. கடைசி மற்றும் 5-வது நாள் ஆட்டம் இன்று நடந்து வருகிறது. ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலே ரஹானே 4 ரன்னில் ஆட்டமிழந்தார். ரிஷப்பந்த், புஜாரா கூட்டணி அணியை சிறப்பாக வழிநடத்தினர். அதிரடியாக ஆடிய ரிஷப்பந்த் 3 ரன்னில் சதத்தை தவறவிட்டு 97 ரன்னில் வெளியேறினார்.

சிறப்பாக ஆடிய புஜாரா 12 பவுண்டரிகளுடன் 77 ரன்கள் சேர்த்த நிலையில் ஹேசல்வுட் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். ரிஷப்பந்த், புஜாரா கூட்டணி 148 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர். தற்போது அஸ்வின் 16 ரன்களுடனும், விஹாரி 6 ரன்களிலும் களத்தில் உள்ளனர்.

தன்னுடைய 80-வது போட்டியில் விளையாடிய புஜாரா டெஸ்ட் கிரிக்கெட்டில் 6ஆயிரம் ரன்ளைக் கடந்தார். டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 6 ஆயிரம் ரன்களை எட்டிய 11-வது இந்திய வீரர் எனும் சாதனையை புஜாரா படைத்தார்.

இதற்கு முன் சச்சின் டெண்டுல்கர்(15,921), ராகுல் திராவிட்(13,265), சுனில் கவாஸ்கர்(10,122) விவிஎஸ் லக்ஷ்மண்(8,781), சேவாக்(8,503), விராட் கோலி(7,318), சவுரவ் கங்குலி(7,212), திலிப் வெங்சர்கர்(6,868), முகமது அசாருதீன்(6,215) குண்டப்பா விஸ்வநாத்(6,080) ஆகியோர் மைல்கல்லை எட்டியுள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in