

கட்டாக்கில் நடைபெற்ற 2-வது டி20 போட்டியின்போது ரசிகர்கள் தண்ணீர் பாட்டிலை மைதானத்துக்குள் எறிந்ததைத் தொடர்ந்து, கான்பூரில் வரும் 11-ம் தேதி நடை பெறவுள்ள இந்தியா-தென் ஆப் பிரிக்கா இடையிலான முதல் ஒரு நாள் போட்டியைக் காண வரும் ரசிகர்கள் தண்ணீர் பாட்டில், சிற் றுண்டி உள்ளிட்ட பொருட்களை எடுத்து வர போலீஸார் தடை விதித்துள்ளனர்.
பாட்டில்கள் உள்ளிட்ட மற்ற பொருட்கள் மைதானத்துக்குள் வீசப்படுவதை தடுப்பதற்காக ரசிகர்கள் அமரும் கேலரிகளின் முன்பு 10 அடி உயர வலை கட்ட முடிவு செய்துள்ளது கான்பூர் கிரிக்கெட் மைதான நிர்வாகம்.