இந்தூரில் இன்று 2-வது ஒருநாள் ஆட்டம்: தோல்வியிலிருந்து மீளுமா இந்தியா?- அக்னி பரீட்சையில் கேப்டன் தோனி

இந்தூரில் இன்று 2-வது ஒருநாள் ஆட்டம்: தோல்வியிலிருந்து மீளுமா இந்தியா?- அக்னி பரீட்சையில் கேப்டன் தோனி
Updated on
3 min read

இந்தியா-தென் ஆப்பிரிக்கா அணி கள் இடையிலான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரின் 2-வது ஆட்டம் மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் இன்று நடைபெறுகிறது.

டி20 தொடரில் தென் ஆப்பிரிக்கா விடம் படுதோல்வி கண்ட இந்திய அணி, இப்போது முதல் ஒருநாள் ஆட்டத்திலும் தோல்வி கண்டிருப் பது இந்திய அணியையும், அதன் கேப்டன் தோனியையும் கடும் நெருக்கடிக்குள் தள்ளியிருக்கிறது. தென் ஆப்பிரிக்க தொடரில் இதுவரை ஒரு போட்டியில்கூட வெற்றி பெறாத இந்திய அணி தோல்வியால் துவண்டுள்ளதோடு, உத்வேகத்தையும் இழந்துள்ளது.

தோனிக்கு அக்னி பரீட்சை

உலகக் கோப்பை போட்டிக்குப் பிறகு வங்கதேசத்துடனான ஒருநாள் தொடர், தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரை இழந் திருக்கும் தோனி தலைமையிலான இந்திய அணி, இப்போது முதல் ஒருநாள் போட்டியிலும் தோற்றிருக்கிறது. இதனால் அவருடைய கேப்டன் பதவிக்கும், கிரிக்கெட் வாழ்க்கைக்கும் ஆபத்து ஏற்பட்டிருக்கிறது.

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் கடைசி ஓவரில் 11 ரன்கள் மட்டுமே தேவைப்பட்ட நிலையில், தோனி களத்தில் நின்றபோதும் இந்திய அணி இலக்கை எட்ட முடியாமல் 5 ரன்களில் தோற்றது. கடந்த காலங்களில் இதுபோன்ற சூழலில் இந்திய அணிக்கு வெற்றி தேடித்தந்த தோனியால், சமீபகாலங்களாக அதிரடி ஷாட் களை ஆடமுடியவில்லை. இது அவ ருக்கு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தியிருப்பதோடு, தோனி தனது ஆக்ரோஷ ஆட்டத்தை இழந்துவிட்டாரோ என்ற சந்தேகத் தையும் எழுப்பியுள்ளது.

எனவே எஞ்சிய 4 போட்டிகளும் தோனிக்கு அக்னி பரீட்சையாகவே பார்க்கப்படுகின்றன. இந்தப் போட்டி களில் இந்திய அணி தோல்வியில் இருந்து மீளாதபட்சத்தில் அதற்கு தோனி மிகப்பெரிய விலை கொடுக்க நேரிடலாம் என எதிர் பார்க்கப்படுகிறது.

நம்பிக்கை நாயகன் ரோஹித்

இந்திய அணியின் பேட்டிங்கைப் பொறுத்தவரையில் ரோஹித் சர்மா இந்தத் தொடரில் இரு சதங்களை அடித்துவிட்டார். கடந்த போட்டியில் 150 ரன்கள் குவித்த அவர் இந்திய அணியின் நம்பிக்கை நாயகனாக திகழ்கிறார். ஆனால் மற்றொரு தொடக்க வீரரான ஷிகர் தவன் இதுவரை பெரிய அளவில் ரன் குவிக்காதது கவலையளிக்கிறது.

கடந்த போட்டியில் 3-வது வீரராக களமிறங்கிய அஜிங்க்ய ரஹானே 60 ரன்கள் குவித்து அசத்தினார். அதனால் அவர் இந்தப் போட்டியிலும் இந்திய அணிக்கு பலம் சேர்ப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரத் தில் விராட் கோலி, கேப்டன் தோனி, சுரேஷ் ரெய்னா ஆகியோர் சிறப்பாக ஆடுவது முக்கியம். விராட் கோலி, ரெய்னா ஆகியோர் இதுவரை பெரிய அளவில் ரன் சேர்க்கவில்லை. கேப்டன் தோனி களத்தில் நின்றாலும், வேகமாக ரன் சேர்க்காதது அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தி விடுகிறது. இந்திய அணி வலுவான ஸ்கோரை குவிக்க வேண்டுமெனில் விராட் கோலி, தோனி, ரெய்னா ஆகியோர் சிறப்பாக ஆடுவது முக்கியம்.

பலவீனமான பவுலிங்

ஆல்ரவுண்டர் ஸ்டூவர்ட் பின்னி, கடந்த போட்டியில் பேட்டிங், பவுலிங் என இரண்டிலுமே சொதப்பியது ஏமாற்றமாக அமைந்தது. ஒரு வேளை அவர் நீக்கப்படும்பட்சத்தில் மற்றொரு ஆல்ரவுண்டரான குருகீரத் சிங்கிற்கு வாய்ப்பு கிடைக் கலாம். பந்துவீச்சில் இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக இருந்த அஸ்வின், விலா எலும்பு பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக இந்தப் போட்டியில் ஆடாதது இந்திய அணிக்கு பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது. அமித் மிஸ்ராவும், ஹர்பஜன் சிங்கும் சுழற்பந்து வீச்சை கவனிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

வேகப்பந்து வீச்சைப் பொறுத்த வரையில் உமேஷ் யாதவ், புவ னேஸ்வர் குமார் ஆகிய இருவ ருடைய பந்துவீச்சுமே எடுபட வில்லை. எனினும் உமேஷ் யாதவ் இரு விக்கெட்டுகளை வீழ்த்தியதால் இந்தப் போட்டியில் நீக்கப்பட வாய்ப்பில்லை. அதநேரத்தில் புவனேஸ்வர் குமாருக்குப் பதிலாக மோஹித் சர்மா இடம்பெற வாய்ப்புள்ளது.

மிரட்டும் டிவில்லியர்ஸ்

முதல் போட்டியில் வென்றிருக் கும் தென் ஆப்பிரிக்க அணி, தொடரை வெல்லும் வாய்ப்பை நெருங்குவதில் தீவிரமாக உள்ளது. அந்த அணி பேட்டிங், பவுலிங் என இரண்டிலும் பலம் வாய்ந்த அணி யாக உள்ளது. கேப்டன் டிவில்லி யர்ஸ், துணை கேப்டன் டூ பிளெஸ்ஸி, டி காக், ஹசிம் ஆம்லா, டேவிட் மில்லர், டுமினி, பெஹார்டி யன் என பலம் வாய்ந்த பேட்ஸ் மேன்கள் அந்த அணியில் உள்ளனர். கடந்த போட்டியில் 73 பந்துகளில் 6 சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் 104 ரன்கள் குவித்த டிவில்லியர்ஸ், இன்றைய போட்டியிலும் இந்திய பவுலர்களுக்கு அச்சுறுத்தலாக இருப்பார் என எதிர்பார்க்கப்படு கிறது. சுழற்பந்து வீச்சில் இம்ரான் தாஹிர் நம்பிக்கையளிக்கிறார். வேகப்பந்து வீச்சில் டேல் ஸ்டெயின், மோர்ன் மோர்கல், ரபாடா கூட்டணி தென் ஆப்பிரிக்காவுக்கு பலம் சேர்க்கிறது.

இந்தியா:

எம்.எஸ்.தோனி (கேப் டன்), ஹர்பஜன் சிங், ஸ்டூவர்ட் பின்னி, ஷிகர் தவன், விராட் கோலி, புவனேஸ்வர் குமார், அக்ஷர் படேல், அஜிங்க்ய ரஹானே, சுரேஷ் ரெய்னா, அம்பட்டி ராயுடு, மோஹித் சர்மா, ரோஹித் சர்மா, உமேஷ் யாதவ், குருகீரத் சிங், அமித் மிஸ்ரா.

தென் ஆப்பிரிக்கா:

ஏ.பி.டிவில்லி யர்ஸ் (கேப்டன்), ஹசிம் ஆம்லா, டி காக், டூ பிளெஸ்ஸி, ஜே.பி.டுமினி, டேவிட் மில்லர், பர்ஹான் பெஹார்டி யன், கிறிஸ் மோரிஸ், கயா ஸோன்டோ, ஆரோன் பங்கிசோ, இம்ரான் தாஹிர், டேல் ஸ்டெயின், மோர்ன் மோர்கல், கைல் அபாட், காகிசோ ரபாடா.

மைதானம் எப்படி?

போட்டி நடைபெறவுள்ள ஹோல்கர் கிரிக்கெட் மைதானம் பேட்டிங்குக்கு சாதகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மைதானத்தில் இதுவரை 3 போட்டிகள் நடைபெற்றுள்ளன. அந்த மூன்றிலும் இந்தியா வெற்றி கண்டுள்ளது. 2006 மற்றும் 2008-ல் இங்கு நடைபெற்ற ஆட்டங்களில் இந்திய அணி முறையே 7 விக்கெட் மற்றும் 54 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தைத் தோற்கடித்துள்ளது. கடைசியாக 2011 டிசம்பரில் இங்கு நடைபெற்ற ஆட்டத்தில் இந்திய அணி 153 ரன்கள் வித்தியாசத்தில் மேற்கிந்தியத் தீவுகளை தோற்கடித்தது. அந்த ஆட்டத்தில் சேவாக் 219 ரன்கள் குவித்தது குறிப்பிடத்தக்கது. எனவே இன்றைய ஆட்டத்திலும் இந்திய அணி வெற்றி பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

நம்பர்-1 அணியாக இருக்க விரும்பினால் சிறு தவறுகள் தொடரக் கூடாது: ரோஹித்

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது ஒருநாள் ஆட்டம் குறித்து இந்திய அணியின் தொடக்க வீரர் ரோஹித் சர்மா கூறுகையில், “இந்திய அணி உலகின் முதல் நிலை அணியாக இருக்க விரும்பினால் சிறு தவறுகளை தொடர்ந்து செய்யக்கூடாது. கடந்த போட்டிகளில் நடந்ததைப் போன்று மீண்டும் நடந்தால் அதற்கு மன்னிப்பே கிடையாது. அணியாக ஒருங்கிணைந்து கடுமையாகப் போராட விரும்புகிறோம். கடந்த போட்டிகளில் நிகழ்ந்த தவறுகள் இனி நடக்காது என நம்புகிறேன். ஏனெனில் முன்னணி அணிகள் ஒரே தவறை மீண்டும் செய்யாது. கடினமான சூழல்களை கையாளும் அளவுக்கு வீரர்கள் அனைவருமே முதிர்ச்சியுள்ளவர்களாக இருக்கிறோம்.

கடைசிக் கட்ட ஓவர்களில் இந்திய அணி யின் பந்து வீச்சு எடுபடவில்லை என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அதேநேரத்தில் டிவில்லியர்ஸ் போன்ற வீரர்கள் களத்தில் நிற்கும்போது கூடுதல் நுணுக்கத்துடனும், உயிர்ப்போடும் பந்துவீசுவது அவசியம். குறையை சரி செய்வதற்காக எங்கள் பவுலர்கள் முயற்சித்துக் கொண்டிருக்கிறார்கள். தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக மட்டுமின்றி, வங்கதேசம் மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராகவும் கடைசி 5 ஓவர்களில் எங்களால் சிறப்பாக பந்துவீச முடியவில்லை” என்றார்.

போட்டி நேரம்: பிற்பகல் 1.30

நேரடி ஒளிபரப்பு: ஸ்டார் ஸ்போர்ட்ஸ், தூர்தர்ஷன்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in