

தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டரான டுமினி இந்தியாவுக்கு எதிராக கடந்த 18ம் தேதி ராஜ்கோட்டில் நடைபெற்ற 3வது ஒருநாள் போட்டியின் போது காயம் அடைந்தார்.
வலது கையில் அவருக்கு ஏற்பட்டுள்ள காயம் இன்னும் முழுமையாக குணமடையவில்லை. இதனால் நவம்பர் 5ம் தேதி மொகாலியில் இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்டில் டுமினி விளையாட 50 சதவீத வாய்ப்புகளே உள்ளது என தென் ஆப்பிரிக்கா அணியின் ஊடக மேலாளார் மேல்ஹூட்டு தெரிவித்துள்ளார்.