

நெதர்லாந்தில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை ஹாக்கிப் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணியை 5-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அர்ஜென்டீனாமுதல் முறையாக உலகக் கோப்பை போட்டிகளில் அரையிறுதிக்குள் நுழைந்து வரலாறு படைத்துள்ளது.
இந்த வெற்றியின் மூலம் மற்றொரு முதன்மை அணியான ஜெர்மனி அரையிறுதி வாய்ப்பை இழந்துள்ளது.
5 போட்டிகளில் 4-ல் வென்று அர்ஜென்டீனா 12 புள்ளிகள் பெற்று அரையிறுதி வாய்ப்பை ஜெர்மனியிடமிருந்து தட்டிப்பறித்துள்ளது.
பிரிவு பி-யில் நெதர்லாந்து அணி முதலில் அரையிறுதிக்குத் தகுதி பெற்றது. பிரிவு ஏ-யில் இங்கிலாந்து, ஆஸ்திரேலிய அணிகள் அரையிறுதிக்கு முன்னேற பிரிவு பி-யில் அர்ஜென் டீனா மற்றும் நெதர்லாந்து அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.
உலகக் கோப்பை ஹாக்கி வரலாற்றில் ஜெர்மனி அரையிறுதிக்குத் தகுதி பெறாமல் வெளியேறுவது இதுவே முதல் முறை. இதற்கு முன்பு முதல் ஹாக்கி உலகக் கோப்பை போட்டிகள் 1971ஆம் ஆண்டு நடைபெற்றபோது கென்யா தகுதி பெற்று மேற்கு ஜெர்மனியை வெளியேற்றியது.
இதற்கு முன்பு உலகக் கோப்பை ஹாக்கி தொடரில் அர்ஜென்டீனா 1986 மற்றும் 2002ஆம் ஆண்டு 6ஆம் இடம் பிடித்ததே அந்த அணியின் சிறப்பாக இருந்தது.