முஷ்டாக் அலி டி20 கோப்பை: முதல்முறையாக மும்பை சீனியர் அணியில் சச்சின் மகனுக்கு இடம்

சச்சின் மகன் அர்ஜுன் டெண்டுல்கர் : கோப்புப்படம்
சச்சின் மகன் அர்ஜுன் டெண்டுல்கர் : கோப்புப்படம்
Updated on
1 min read

வரும் 10-ம் தேதி தொடங்க இருக்கும் சயத் முஷ்டாக் அலி டி20 போட்டித் தொடருக்கான மும்பை சீனியர் அணியில் சச்சின் டெண்டுல்கர் மகன் அர்ஜுன் டெண்டுல்கர் முதல்முறையாக இடம் பெற்றுள்ளார்.

முஷ்டாக் அலி கோப்பைக்கான 22 பேர் கொண்ட அணியில் அர்ஜுன் டெண்டுல்கர் இடம் பெற்றுள்ளார் என மும்பை அணியின் தேர்வுக் குழுத் தலைவர் சசில் அங்கோலா தெரிவித்துள்ளார்.

சச்சின் மகன் அர்ஜுன் டெண்டுல்கர் தவிர்த்து, வேகப்பந்துவீச்சாளர்கள் ருத்திக் ஹனகாவாடியும் சேர்க்கப்பட்டுள்ளார்.

முதலில் முஷ்டாக் அலி கோப்பைக்கு 20 வீரர்கள் ஓர் அணிக்கு தேர்வு செய்தால் போதும் என பிசிசிஐ அறிவுறுத்தி இருந்தது. ஆனால்,கரோனா சூழல் காரணமாக யாரேனும் பாதிக்கப்பட்டால் மாற்று வீரர்கள் தேவை என்பதை கருத்தில் கொண்டு கூடுதலாக 2 வீரர்களைத் தேர்வு செய்ய பிசிசிஐ அறிவுறுத்தியது.

இதைத்தொடர்ந்து 22 பேர் கொண்ட அணியில் அர்ஜுன் டெண்டுல்கருக்கு இடம் கிடைத்துள்ளது. மும்பை சீனியர் அணியில் 21 வயதாகும் அர்ஜுன் டெல்டுல்கருக்கு முதல்முறையாக இடம் கிடைத்துள்ளது.

முன்னதாக 19வயதுக்குட் பட்டோருக்காஇந்திய அணியில் விளையாடிய அர்ஜுன் டெண்டுல்கர் இலங்கைப் பயணம் மேற்கொண்டிருந்தார். இந்திய அணிக்கான வலைப்பயிற்சி பந்துவீச்சாளராகவும் அர்ஜுன் டெண்டுல்கர் இடம் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

மும்பை அணிக்கு கேப்டனாக சூர்யகுமார் யாதவ் நியமிக்கப்பட்டுள்ளார். சூர்யகுமார் தலைமையில் சச்சின் மகன் அர்ஜூன் ெடண்டுல்கர் விளையாட உள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in