Last Updated : 01 Jan, 2021 11:47 AM

 

Published : 01 Jan 2021 11:47 AM
Last Updated : 01 Jan 2021 11:47 AM

ஐசிசி டெஸ்ட் தரவரிசை: : விராட் கோலி, ஸ்மித் சிறந்தவர்கள்: முதலிடம் பிடித்த வில்லியம்ஸன் புகழாரம்: ரஹானே ஏற்றம் 

நியூஸிலாந்து கேப்டன் கேன் வில்லியம்ஸன் : கோப்புப்படம்

மவுன்ட் மவுங்கானி


ஐசிசி டெஸ்ட் போட்டிகளுக்கான பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் இந்தியஅணியின் கேப்டன் விராட் கோலி, ஸ்டீவ் ஸ்மித் இருவரையும் பின்னுக்குத் தள்ளி நியூஸிலாந்து கேப்டன் வில்லியம்ஸன் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.

விராட் கோலி, ஸ்டீவ் ஸ்மித் இருவருமே சிறந்தவீரர்கள். இவர்களுக்கு எதிராக நான் விளையாடியதை நல்வாய்ப்பாக பார்க்கிறேன் என்று வில்லியம்ஸன் தெரிவித்துள்ளார்.

ஐசிசி டெஸ்ட் தரவரிசைப் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. இதில் முதலிடத்தில் இருந்த ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித் 3-வது இடத்துக்கு தள்ளப்பட்டார். இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இரு டக்அவுட்கள், 8,1 ரன்கள் எடுத்ததால், ஸ்மித் 3-வது இடத்துக்கு பின்னடைந்தார். 877 புள்ளிகளுடன் ஸ்மித் 3-வது இடத்துக்குச் சரிந்துள்ளார்.

அதேசமயம், இந்திய அணியின் ேகப்டன் விராட் கோலி, 879 புள்ளிகளுடன் தொடர்ந்து 2-வது இடத்தில் நீடிக்கிறார்.

பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் சதம் அடித்து 129 ரன்கள் குவித்து ஆட்டநாயகன் விருது வென்ற நியூஸிலாந்து கேப்டன் கேன் வில்லியம்ஸன், 890 புள்ளிகளுடன் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளார்.

அதேசமயம், இந்திய அணியின் இடைக்காலக் கேப்டன் ரஹானே, மெல்போர்ன் டெஸ்டில் சதம்(112), 27ரன்கள் சேர்த்ததையடுத்து தரவரிசையில் 784 புள்ளிகளுடன் 6-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

ஆஸிக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் மொத்தம் 5 வி்க்கெட்டுகளை வீழ்த்திய இந்திய வீரர் அஸ்வின் பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் 793 புள்ளிகளுடன் 7-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார். பும்ரா 9-வது இடத்துக்கு ஏற்றம் கண்டுள்ளார். இரு டெஸ்ட் போட்டிகளிலும் மோசமாக ஆடிய இந்திய வீரர் சத்தேஸ்வர் புஜாரா 10-வது இடத்துக்குச் சரிந்துள்ளார்.

பாக்ஸிங்டே டெஸ்ட் போட்டியில் அரைசதம் அடித்து, 3விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய ஆல்ரவுண்டர் ரவிந்திர ஜடேஜா, ஆல்ரவுண்டர்களுக்கான தரவரிசையில் 416 புள்ளிகளுடன் 3-வது இடத்தில் இருந்தாலும், 2-வது இடத்தில் உள்ள ஹோல்டருக்கு நெருக்கமாகச் சென்றுவிட்டார். ஹோல்டர் 423 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் உள்ளார். மெல்போர்ன் டெஸ்டில் அறிமுகமாகிய ஷூப்மான் கில் 76-வது இடத்தையும், முகமது சிராஜ் 77-வது இடத்தையும் பிடித்துள்ளனர்.

ஐசிசி ட்விட்டர் தளத்தில் நியூஸிாலந்து கேப்டன் வில்லியம்ஸன் வெளியிட்ட வீடியோவில் கூறுகையில் “ இந்திய கேப்டன் கோலி, ஆஸி. வீரர் ஸ்டீவ் ஸ்மித் இருவருமே சிறந்தவர்கள். என்னைப் பொறுத்தவரை இரு வீரர்களையும் நான் முறியடித்தது அதிர்ச்சியாக இருக்கிறது, இந்த தருணத்தில் பணிவாகக் கருதுகிறேன்.

கோலி, ஸ்மித் இருவருமே 3 விதமான போட்டிகளிலும் ஆண்டுமுழுவதும் ஆடி, போட்டியை முன்னெடுத்துச் செல்லக்கூடியவர்கள். இவர்களுக்கு எதிராக நான் ஆடியதை நல்வாய்ப்பாக கருதுகிறேன். அணிக்காக நம்மால் என்ன செய்ய முடியுமே அதைச் செய்கிறேன்.

முடிந்த அளவுக்கு அணிக்கு பங்களிப்புச் செய்யும்போது, அதன் பிரதிபலிப்பு ஐசிசி தரவரிசையில் தெரிகிறது. பாகிஸ்தானுக்கு எதிரான பாக்ஸிங்டே டெஸ்ட் போட்டியில் மிகவும் நெருக்கடியான கட்டத்தில்தான் வென்றோம். இரு அணிகளுமே வெற்றிக்காக கடுமையாக உழைத்தன” எனத் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x