Published : 25 Oct 2015 02:57 PM
Last Updated : 25 Oct 2015 02:57 PM

அதிவேக ஒருநாள் 6,000 ரன்கள்; விராட் கோலியை முறியடித்த ஹஷிம் ஆம்லா

ஒருநாள் கிரிக்கெட்டில் அதிவேகமாக 6000 ரன்கள் எடுத்து தென் ஆப்பிரிக்க தொடக்க வீரர் ஹஷிம் ஆம்லா சாதனை புரிந்தார்.

விராட் கோலி 136 இன்னிங்ஸ்களில் 6000 ரன்களை எட்டிய சாதனையை 123 இன்னிங்ஸ்களில் எட்டி முறியடித்தார் ஆம்லா.

மும்பையில் நடைபெற்று வரும் கடைசி ஒருநாள் போட்டியில் இந்தச் சாதனையை நிகழ்த்திய ஹஷிம் ஆம்லா ஆட்டத்தின் 4-வது ஓவரில் அவ்வளவு திருப்திகரமாக அமையாத புல் ஷாட் பவுண்டரி மூலம் மோஹித் சர்மா ஓவரில் இந்தச் சாதனையை நிகழ்த்தினார்.

அதே ஓவரில் 3 பவுண்டரிகளை அடித்த ஆம்லா, 13 பந்துகளில் 5 பவுண்டரிகள் மூலம் 23 ரன்கள் எடுத்த நிலையில், மோஹித் சர்மா பந்து ஒன்று சற்றே கூடுதலாக எழும்ப ஆம்லா செய்த கட் ஷாட் சரியாக மட்டையில் சிக்காமல் விளிம்பில் பட்டு தோனியிடம் கேட்ச் ஆனது.

தற்போது தென் ஆப்பிரிக்கா 17 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 111 ரன்கள் எடுத்து வலுவாகச் சென்று கொண்டிருக்கிறது, குவிண்டன் டி காக் 56 பந்துகளில் 63 ரன்கள் எடுத்தும் டுபிளெஸ்ஸிஸ் 21 ரன்கள் எடுத்தும் களத்தில் உள்ளனர்.

இந்நிலையில் அமித் மிஸ்ரா பந்தில் சற்று முன் 16-வது ஓவரில் டி காக் கொடுத்த கேட்சை தவறாகக் கணித்து மோஹித் சர்மா கோட்டை விட்டார்.

டுபிளெஸ்ஸிஸ், டி காக் இணைந்து 83 பந்துகளில் 2-வது விக்கெட்டுக்காக 87 ரன்களை இதுவரை சேர்த்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x