இந்திய அணி மாற்றமடையும் காலக்கட்டத்தில் உள்ளது: கேப்டன் தோனி கருத்து

இந்திய அணி மாற்றமடையும் காலக்கட்டத்தில் உள்ளது: கேப்டன் தோனி கருத்து
Updated on
1 min read

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய அணி 214 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்ததுடன் தொடரை 2-3 என்ற கணக்கில் இழந்தது. தோல்வி குறித்து கேப்டன் தோனி அளித்த பேட்டி:

வான்கடே மைதானம் எந்த வகையிலும் பந்துவீச்சாளர் களுக்கு உதவவில்லை. பேட்டிங் குக்கு ஏற்ற இந்த ஆடுகளத்தை தென்ஆப்பிரிக்கா சரியாக பயன்படுத்திக் கொண்டது. 25 ஓவர் களுக்கு பிறகு ஆட்டம் எங்கள் கட்டுப்பாட்டில் இல்லை. ஓவர் களுக்கு 10 முதல் 15 ரன்கள் எதிரணியினர் சேர்க்கும் போது நிலைமை இப்படி தான் இருக்கும். எந்த ஒரு கட்டத்திலும் ரன்குவிப்பை கட்டுப்படுத்த முடியாமல் போனது. மேலும் அனைத்து உத்திகளும் தோல்வியடைந்தன.

அணியில் உள்ள பேட்டிங் பிரச்சினைகளை களைந்தாக வேண்டும். நடுவரிசை மற்றும் கீழ் வரிசையில் பேட்டிங் வலுவடைய வேண்டும். அதே போல் ஆட்டத் தின் எந்த தருணத்திலும் விக்கெட் டுகளைக் கைப்பற்றும் பவுலர்கள் வேண்டும். சீராக விளையாட நன்றாக செட்டில் ஆன அணியாக இருக்க வேண்டும். நம் அணி ஓரளவுக்கு இன்னும் செட்டில் ஆகாத அணியாகவே உள்ளது.

ஸ்விங் பவுலிங் ஆண்ரவுண்ட ராக ஸ்டூவர்ட் பின்னியை முயற்சி செய்த போது விமர் சனம் எழுந்தது. இரண்டு சிறந்த சுழற் பந்து வீச்சு ஆல்ரவுண்டர்கள் என்றால் அது ரவீந்திர ஜடேஜா மற்றும் அக்ஸர் படேல் ஆகியோர் தான். உங்களுக்கு பிடிக்கிறதோ இல்லையோ இதுதான் சிறந்த அணி. இதனை அதிகபட்சமாக எப்படி பயன்படுத்த முடியுமோ அவ்வளவு தான் பயன்படுத்த முடியும்.

உள்நாட்டு கிரிக்கெட்டில் சிறந்த பவுலர்களாக இருப்பதற்கும் சர்வதேச கிரிக்கெட்டில் டாப் பவுலர்களாக இருப்பதற்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளது.

நம் அணி மாற்றமடையும் காலக்கட்டத்தில் உள்ளது. சில நேரங்களில் இதற்கு கால அவகாசம் தேவைப்படும்.

கடைசி போட்டியில் சுழற்பந்து வீச்சாளர்கள் மோசமாக செயல் பட்டார்கள் என்று கூறுவது நியாயமாகாது. இன்னும் நன்றாக ஆடியிருக்க வேண்டும். இந்த ஒரு ஆட்டத்தை தவிர மற்ற போட்டிகளில் சிறப்பாக தான் செயல்பட்டோம்.

இவ்வாறு தோனி கூறினார்..

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in