

சர்வதேச கால்பந்து சம்மேளனத் தின் (பிஃபா) தலைவர் செப் பிளேட் டர், ஐரோப்பிய கால்பந்து சம் மேளனத்தின் தலைவர் மைக்கேல் பிளாட்டினி ஆகியோரை 3 மாத காலம் இடைநீக்கம் செய்துள்ளது பிஃபா நன்னெறி குழு.
உலகக் கோப்பை டிக்கெட் மோசடி விவகாரத்தில் ஏற்கெனவே விடுப்பில் அனுப்பப்பட்டுள்ள பிஃபா பொதுச் செயலாளர் ஜெரோம் வால்கேவையும் 3 மாத காலம் இடைநீக்கம் செய்துள்ள நன்னெறி குழு, துணைத் தலைவர் சங் மாங் ஜூனுக்கு 6 ஆண்டு தடை விதித்திருப்பதோடு, ரூ.67 லட்சம் அபராதமும் விதித்துள்ளது. இடை நீக்கம் செய்யப்பட்டுள்ள அனை வரும் தேசிய மற்றும் சர்வதேச அளவிலான கால்பந்து நடவடிக் கைகளில் ஈடுபடக்கூடாது எனவும் நன்னெறி குழு உத்தரவிட்டுள்ளது.
உலகக் கோப்பை கால்பந்து போட்டிகளின் ஒளிபரப்பு உரி மையை வழங்கியதில் முறைகேடு செய்தது, தனக்கு ஆதரவாக இருந்த மைக்கேல் பிளாட்டினிக்கு ரூ.13 கோடி லஞ்சம் கொடுத்தது உள்ளிட்டவை தொடர்பாக பிளேட் டருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர் பாக ஸ்விட்சர்லாந்து அட்டர்னி ஜெனரல் விசாரணை நடத்தி வரும் நிலையில், பிஃபா நன்னெறிக் குழு அதிரடி நடவடிக்கையில் இறங்கி யிருப்பது குறிப்பிடத்தக்கது.
பிஃபாவில் பல்வேறு முறைகேடு கள் நிகழ்ந்திருப்பதாக கடந்த மே மாதம் குற்றச்சாட்டு எழுந்த நிலை யில், 5-வது முறையாக தலைவராக தேர்வு செய்யப்பட்ட அடுத்த சில தினங்களிலேயே தனது பதவியை ராஜினாமா செய்தார் பிளேட்டர்.
எனினும் அடுத்த தலைவர் தேர்வு செய்யப்படும் வரையில் அவர் அந்தப் பதவியில் தொடர்வார் என அறிவிக்கப்பட்டிருந்த நிலை யில், இப்போது சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கிறார். வரும் பிப்ரவரியில் நடைபெறவுள்ள தலைவர் தேர்தலில் போட்டியிட விருந்த மைக்கேல் பிளாட்டினியும் இப்போது சஸ்பெண்ட் செய்யப் பட்டிருப்பது பிஃபா வட் டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.