

மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகட் ஹங்கேரி மற்றும் போலாந்தில் 40 நாள் பயிற்சி பெற மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகட் ஒலிம்பிக் திட்டக் குழுவில் (டாப்ஸ்) உள்ளார். இவர் ஹங்கேரியில் உள்ள பயிற்சி மையம், போலந்தில் உள்ள ஒலிம்பிக் பயிற்சி மையம் ஆகியவற்றில் 40 நாட்கள் பயிற்சி பெற அனுமதி மத்திய அரசிடம் அனுமதி கேட்டிருந்தார்.
வினேஷ் போகட்டுடன் அவரது பயிற்சியாளர் வோலர் அகோஸ், கூட்டாளி பிரியங்கா போகட், பிசியோதெரபிஸ்ட் பிரியங்கா ஆகியோரும் உடன் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இவர்களுக்கான தோராய செலவு ரூ.15.51 இலட்சத்துக்கும் டாப்ஸ் திட்டத்தின் கீழ் அனுமதிக்கப்பட்டுள்ளது.