மெல்பர்னில் பாக்ஸிங் டே டெஸ்ட் இன்று தொடக்கம்: ஆஸி. பந்து வீச்சை தாக்குப் பிடிக்குமா ரஹானே படை?

மெல்பர்னில் பாக்ஸிங் டே டெஸ்ட் இன்று தொடக்கம்: ஆஸி. பந்து வீச்சை தாக்குப் பிடிக்குமா ரஹானே படை?
Updated on
1 min read

இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் அடிலெய்டில் நடைபெற்ற பகலிரவு டெஸ்டில் இந்திய அணி 2-வது இன்னிங்ஸில் 36 ரன்களுக்கு ஆட்டமிழந்து படுதோல்வியை சந்தித்தது.

இதனால் தொடரில் 0-1 என இந்திய அணி பின்தங்கி உள்ளது. இந்நிலையில் 2-வது போட்டியான பாக்ஸிங் டே டெஸ்ட் மெல்பர்ன் கிரிக்கெட் மைதானத்தில் இன்று தொடங்குகிறது.

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, முதல் குழந்தைக்கு தந்தையாக உள்ளதை தொடர்ந்து அவர் விடுப்பு எடுத்துக் கொண்டு தாயகம் திரும்பியுள்ளார். இதனால் அஜிங்க்ய ரஹானே அணியை வழிநடத்த உள்ளார். இன்று தொடங்கும் போட்டிக்கான 11 பேர் கொண்ட இந்திய அணி நேற்றே அறிவிக்கப்பட்டது. இதில் முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடிய தொடக்க வீரரான பிரித்வி ஷா நீக்கப்பட்டுள்ளார்.

அவருக்கு பதிலாக 21 வயதான ஷுப்மன் கில் சேர்க்கப்பட்டுள்ளார். அதேவேளையில் முதல் டெஸ்டில் காயம் அடைந்த மொகமது ஷமிக்கு பதிலாக மொகமது சிராஜ் அணிக்குள் கொண்டு வரப்பட்டுள்ளார். கில், சிராஜ் ஆகியோருக்கு இது அறிமுக போட்டியாகும். மேலும் ரித்திமான் சாஹா நீக்கப்பட்டு ரிஷப் பந்த் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக சேர்க்கப்பட்டுள்ளார்.

விராட் கோலி விளையாடாத நிலையில் இந்திய அணி 5 பந்து வீச்சாளர்களுடன் போட்டியை சந்திக்க முடிவு செய்துள்ளது. ஆஸ்திரேலிய அணி தொடரில்1-0 என முன்னிலை வகிப்பதால் மனரீதியாக கூடுதல் நம்பிக்கையுடன் களமிறங்குகிறது.

இந்திய அணி விவரம்: அஜிங்க்ய ரஹானே (கேப்டன்), மயங்க் அகர்வால், ஷுப்மன் கில், சேதேஷ்வர் புஜாரா, ஹனுமா விகாரி, ரிஷப் பந்த், ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஸ்வின், உமேஷ் யாதவ், ஜஸ்பிரீத் பும்ரா, மொகமது சிராஜ்.

நேரம்: அதிகாலை 5 மணி

நேரலை: சோனி சிக்ஸ்

ஐஎஸ்எல் கால்பந்து

இன்றைய போட்டி

சென்னை – ஈஸ்ட் பெங்கால்

நேரம்: இரவு 7.30

இடம்: வாஸ்கோடகாமா

நேரலை: ஸ்டார் ஸ்போர்ட்ஸ்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in