Published : 26 Dec 2020 03:14 am

Updated : 12 Feb 2021 16:46 pm

 

Published : 26 Dec 2020 03:14 AM
Last Updated : 12 Feb 2021 04:46 PM

விளையாட்டாய் சில கதைகள்: தூக்கத்தை இழந்து சாதித்த சிந்து

sports-story

பேட்மிண்டனில் இந்தியாவின் புகழை ஒலிம்பிக் வரை பறக்கவிட்டவர் பி.வி.சிந்து. இன்றைய தினம் சாய்னா நெவாலைவிட இந்தியாவின் முன்னணி நட்சத்திரமாக பி.வி.சிந்துதான் திகழ்கிறார். ஆனால் இதே சிந்து, சாய்னாவுக்காக ஒரு காலத்தில் விட்டுக் கொடுக்கவும் வேண்டிவந்துள்ளது.

சிறுவயதில் பேட்மிண்டனில் தனது கவனம் பதிய காரணமாக இருந்த கோபிசந்திடமே பயிற்சி பெற சிந்து விரும்பினார். இதைத்தொடர்ந்து சிந்துவுக்கு 10 வயதாக இருந்தபோது அவரது பெற்றோர் கோபிசந்தை அணுகினர். அவரது பயிற்சி மையம் ஆந்திர மாநிலத்தில் உள்ள கச்சி பவுளி என்ற இடத்தில் அமைந்திருந்தது. “நான் இப்போது சாய்னா நெவால் என்ற பெண்ணுக்கு தினமும் காலை 6.30 மணி முதல் பயிற்சியளித்து வருகிறேன். அதனால் அந்த நேரத்தில் பயிற்சி அளிக்க முடியாது. நீங்கள் விரும்பினால் உங்கள் மகளை காலை 4.30 மணிக்கு அழைத்து வரலாம். நான் தினமும் 2 மணிநேரம் பயிற்சி அளிக்கிறேன்” என்று கூறியுள்ளார் கோபிசந்த்.


சிந்துவின் வீடு இருந்தது செகந்திராபாதில். அங்கிருந்து கச்சி பவுளிக்கு வர அவர் 27 கி.மீ. தூரம் பயணம் செய்யவேண்டும். காலை 4.30-க்கு பயிற்சிக்கு வரவேண்டுமென்றால் 3 மணிக்கே எழுந்து தயாராக வேண்டும். இப்படிப்பட்ட சூழ்நிலையில் தங்கள் மகளால் தினந்தோறும் பயிற்சிக்கு வர முடியுமா என்று சிந்துவின் பெற்றோர் தயங்கினர். ஆனால் சிந்துவோ, தன்னால் முடியும் என்று துணிந்து நின்றார். பல மாதங்கள் காலை 3 மணிக்கே எழுந்து 27 கிலோமீட்டர் தூரம் பயணம் செய்து பயிற்சிக்கு வந்தார்.

இப்படி கடும் சவாலை மீறி பயிற்சிபெற்ற சிந்து, ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்று, தன் குருநாதர் கோபிசந்துக்கு சாய்னாவை விட அதிக கவுரவம் பெற்றுத் தந்தார்.



விளையாட்டாய் சில கதைகள்தூக்கத்தை இழந்து சாதித்த சிந்துSports storyPv sindhu

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x