

மெல்போர்னில் நாளை நடக்கும் ஆஸ்திரேலிய அணியுடனான பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியில் இந்திய அணியில் விளையாடும் 11 வீரர்கள் கொண்ட அணியை பிசிசிஐ இன்று வெளியிட்டுள்ளது.
ஆஸ்திரேலியா, இந்தியா அணிகளுக்கு இடையிலான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் தொடங்கி நடந்து வருகிறது. அடிலெய்டில் நடந்த பகலிரவாக, பிங்க் பந்து டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் மோசமான தோல்விஅடைந்தது.
இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் பிரித்வி ஷா இரு இன்னிங்ஸ்களிலும் மோசமான ஆட்டத்ைத வெளிப்படுத்தியதால், அவர் மீது கடும் விமர்சனங்கள் எழுந்தன. வெளியில் அமரவைக்கப்பட்டிருக்கும் கே.எல்.ராகுல், ரிஷப்பந்த் இருவரையும் அணிக்குள் கொண்டுவர வேண்டும் என்று குரல்கள் எழுந்தன.
மேலும், முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸி. வீரர் கம்மின் பந்துவீச்சில் கை மணிக்கட்டில் காயம் அடைந்து, டெஸ்ட் தொடரிலிருந்தே இந்தியஅணியின் வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமி விலகினார். அதுமட்டுமல்லாமல் தனது மனைவிக்கு முதல் குழந்தை பிறப்பதையடுத்து, கேப்டன் கோலியும் விடுப்பில் சென்றுவிட்டார்.
ஆதலால், வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமி, கேப்டன் கோலி இல்லாத நிலையில் இந்திய அணி நாளை டெஸ்ட் போட்டியில் எதிர்கொள்கிறது. நாளை நடக்கும் டெஸ்ட் போட்டிக்கான 11 வீரர்கள் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
அடிலெய்ட் டெஸ்ட் போட்டி மின்னொளியில் பிங்க் பந்தில் நடந்தது. ஆனால், நாளை மெல்போர்னில் பகல் நேரத்தில் வழக்கமான சிவப்பு பந்தில் டெஸ்ட் போட்டி நடக்கிறது. ஆதலால், ஆஸி.அணிக்கு நிச்சயம் சவால் அளிக்கக் கூடிய வகையில் இந்திய அணியின் பங்களிப்பு இருக்கும்.
இந்தியஅணியில் 3 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. பிரித்வி ஷாவுக்கு பதிலாக சுப்மான் கில் டெஸ்ட் போட்டியில் அறிமுகமாகிறார். விக்கெட் கீப்பர் சாஹாவுக்கு பதிலாக ரிஷப்பந்த் உள்ளே வந்துள்ளனர். குல்தீப் யாதவுக்கு பதிலாக ரவிந்திர ஜடேஜா அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். முகமது ஷமி காயம் அடைந்ததால், அவருக்கு பதிலாக முகமது சிராஜ் அறிமுகமாகிறார்.
மெல்போர்ன்அணி பேட்ஸ்மேன்களுக்கு ஓரளவுக்கு சாதகமாக இருக்கும்என்பதால், பேட்டிங்கிற்கு அதிகமான முக்கியத்துவம் இந்தியஅணியில் அளி்க்கப்பட்டுள்ளது. கில், அகர்வால், விஹாரி, ரஹானே, ரிஷப்பந்த், ஜடேஜா, புஜாரா என 7பேட்ஸ்ேமன்கள் உள்ளனர்.
இந்தியஅணி விவரம்:
அஜின்கயே ரஹானே(கேப்டன்), மயங்க் அகர்வால், சுப்மான் கில், சத்தேஸ்வர் புஜாரா, ஹனுமா விஹாரி, ரிஷப் பந்த், ரவிந்திர ஜடேஜா, ரவிச்சந்திர அஸ்வின், உமேஷ் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ்