

இங்கிலாந்துக்கு எதிராக துபாயில் நடைபெற்று வரும் 2வது டெஸ்டில் பாகிஸ்தான் அணி 4 விக்கெட் இழப்புக்கு 282 ரன்கள் என்ற நிலையில் நேற்று 2வது நாள் ஆட்டத்தை தொடர்ந்தது. மிஸ்பா உல் ஹக் மேற்கொண்டு ரன் எதும் சேர்க்காமல் 102 ரன்னில் வெளியேறினார்.
ஆசாத் ஷபிக் 83, சர்ப்ராஸ் அஹமது 32 ரன்கள் எடுத்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேற முடிவில் பாகிஸ்தான் அணி 118.5 ஓவர்களில் 378 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இங்கிலாந்து தரப்பில் மொயீன் அலி, மார்க் உட் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை சாய்த்தனர்.
பின்னர் ஆடிய இங்கிலாந்து நேற்றைய ஆட்டநேர முடிவில் 51 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 182 ரன்கள் எடுத்தது. மொயீன் அலி 1, இயான் பெல் 4, அலாஸ்டர் குக் 65 ரன்கள் எடுத்தனர். ஜோ ரூட் 76, பேர்ஸ்டோவ் 27 ரன்களுடன் களத்தில் உள்ளனர்.