Published : 19 Dec 2020 03:14 am

Updated : 12 Feb 2021 16:47 pm

 

Published : 19 Dec 2020 03:14 AM
Last Updated : 12 Feb 2021 04:47 PM

விளையாட்டாய் சில கதைகள்: திருடுபோன உலகக் கோப்பை

sport-story

உலகெங்கிலும் உள்ள கால்பந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்திய நாள் டிசம்பர் 19. 1983-ம் ஆண்டில், இந்த நாளில்தான் பிரேசில் நாட்டில் உள்ள அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருந்த கால்பந்துக்கான உலகக் கோப்பை திருடப்பட்டது.

உலகக் கோப்பை கால்பந்து தொடங்குவதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் ஜூல்ஸ் ரிமெட் (Jules Rimet). 1928-ம் ஆண்டில், இவரது தலைமையில் நடந்த பிஃபா அமைப்பின் கூட்டத்தில்தான் உலகக் கோப்பை கால்பந்து போட்டிகளை நடத்த முடிவெடுக்கப்பட்டது. இதன் காரணமாக கால்பந்து உலகக் கோப்பைக்கு ‘ஜூல்ஸ் ரிமெட் கோப்பை’ என்று பெயரிடப்பட்டது.


18 காரட் தங்கத்தால் உருவாக்கப்பட்ட இந்த உலகக் கோப்பை 3.8 கிலோ எடை கொண்டதாக இருந்தது.

உலகக் கோப்பையில் 1958, 1962 மற்றும் 1970 என 3 முறை சாம்பியன் பட்டம் வென்றதால், இந்த உலகக் கோப்பை பிரேசில் நாட்டுக்கு சொந்தமாக வழங்கப்பட்டது.

தங்களுக்கு கிடைத்த மிகப்பெரிய கவுரவமாக இந்த உலகக் கோப்பையை கருதிய பிரேசில் அரசு, அதை அருங்காட்சியகத்தில் வைத்திருந்தது.

இந்தச் சூழலில் 1983-ம் ஆண்டு டிசம்பர் 19-ம் தேதி, அருங்காட்சியகத்துக்குள் நுழைந்த திருடர்கள், அங்கிருந்த காவலாளியை கட்டிப் போட்டு, உலகக் கோப்பையை திருடிச் சென்றனர். உலகக் கோப்பை திருடுபோனதால், ஒட்டுமொத்த பிரேசிலும் சோகத்தில் ஆழ்ந்தது.

எந்தவித சேதமும் இல்லாமல் கோப்பையை ஒப்படைப்பவர்களுக்கு பெரிய அளவில் பரிசளிக்கப்படும் என்று ரியோ டி ஜெனிரோ ஸ்டேட் வங்கி அறிவித்தது. கோப்பையை மீட்க தங்களுக்கு உதவுமாறு அனைத்து மக்களுக்கும் அரசு வேண்டுகோள் விடுத்தது. ஆனால் கோப்பை மட்டும் கிடைக்கவில்லை. அது தங்கக் கட்டிகளாக மாற்றப்பட்டு விற்கப்பட்டதா என எந்தத் தகவலும் இதுவரை தெரியவில்லை.



விளையாட்டாய் சில கதைகள்உலகக் கோப்பைதிருடுபோன உலகக் கோப்பைSport storyகால்பந்து

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x