2-வது டி20: தென் ஆப்பிரிக்கா மீண்டும் டாஸ் வென்று பீல்டிங்

2-வது டி20: தென் ஆப்பிரிக்கா மீண்டும் டாஸ் வென்று பீல்டிங்
Updated on
1 min read

கட்டாக்கில் இன்னும் சற்று நேரத்தில் தொடங்கவுள்ள இந்திய-தென் ஆப்பிரிக்க அணிகளின் 2-வது டி20 போட்டியில் தென் ஆப்பிரிக்கா டாஸ் வென்று மீண்டும் இந்திய அணியை பேட் செய்ய அழைத்துள்ளது.

இந்த முறை இந்திய அணி நிச்சயம் 3 ஸ்பின்னர்களுடன் களமிறங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதன் படியே ஸ்ரீநாத் அரவிந்த் உட்கார வைக்கப்பட்டு ஹர்பஜன் சிங் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். மற்ற படி இந்திய அணியில் மாற்றம் எதுவும் இல்லை.

தென் ஆப்பிரிக்க அணியில் மெர்சண்ட் டி லாங்கேவுக்குப் பதிலாக ஆல்பி மோர்கெல் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

டாஸில் தோற்ற தோனி, தானும் பீல்டிங்கையே தேர்வு செய்திருப்பேன் என்றார். பனிப்பொழிவு பெரும் அச்சுறுத்தலாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால் அதன் பயனை தங்களுக்குச் சாதகமாக்கிக் கொள்ள தென் ஆப்பிரிக்கா மீண்டும் பீல்டிங்கைத் தேர்வு செய்துள்ளது .

பிட்சில் கொஞ்சம் வெடிப்புகள் உள்ளதால் சுழற்பந்து வீச்சுக்கு சற்றே சாதகமாக இருக்கும் என்பதால் அக்சர், அஸ்வின், ஹர்பஜன் என்று 3 ஸ்பின்னர்களுடன் களமிறங்குகிறது இந்திய அணி.

அமித் மிஸ்ரா, அஜிங்கிய ரஹானே அணியில் சேர்க்கப்படுவர் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தோனி எப்போதும் 2,3 மாற்றங்களைச் செய்யக் கூடியவர் அல்ல என்பது நாம் அறிந்ததே.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in