மெஸ்ஸி தான் சிறந்த வீரர்: பீலே

மெஸ்ஸி தான் சிறந்த வீரர்: பீலே
Updated on
1 min read

பிரேசில் கால்பந்து ஜாம்பவான் பீலே(74) மூன்று முறை (1958,62,70) உலக கோப்பை வென்ற அணியில் இடம் பெற்றவர். இவரை இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடர் (ஐ.எஸ்.எல்.,) நிர்வாகிகள், சிறப்பு விருந்தினராக கொல்கத்தாவுக்கு அழைத்து வந்துள்ளனர். ஐ.எஸ்.எல். போட்டியில் கோல்கத்தா-கேரளா அணிகள் இன்று மோதும் ஆட்டத்தை பீலே நேரில் கண்டு ரசிக்கிறார். இந்நிலையில் பீலே நேற்று நிருபர்களிடம் கூறும் போது,

‘‘வெவ்வேறு தலைமுறைகள் கொண்ட வீரர்களை ஒப்பிட்டுப் பார்ப்பது மிகவும் கடினம். ஆனால் கடந்த 10 ஆண்டுகளில் மெஸ்சி தான் உலகின் சிறந்த கால்பந்து வீரராக உள்ளார்.

மெஸ்ஸி வெவ்வேறு ஸ்டைலில் விளையாடுகிறார். ஆனால், ரொனால்டோ முன்கள வீரராக மட்டுமே களமிறங்கி கோல் அடிக்க முயற்சிக்கிறார். என்னு டைய அணியில் இரண்டு பேரை யும் நான் விரும்புவேன். பிரேசில் அணியின் நெய்மருக்கு நல்ல எதிர்காலம் உள்ளது.

தற்போது கால்பந்து விளை யாட்டு முன்பை விடமிகக்கடின மாக உள்ளது.

ஆனால் இந்த விளை யாட்டை திறம்பட ஆடும் வரத்தை கடவுள் அளித்தால் எந்த தலை முறையிலும் அது கடினமாக இருக்காது. கால்பந்து ஆட்டம் என்பது திறமையின் அடிப் படையில் மட்டுமே ஆனது.தற்போது பிபா தலைவர் பதவிக்கு போட்டியிடும் எண்ண மில்லை. இவ்வாறு அவர் கூறினார்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in