

மேற்கத்திய நாடுகளில் இளைஞர்கள் சாலையில் ஆடும் பிரேக் டான்ஸிங் (ஹிப் ஹாப்) நடனத்துக்கு ஒலிம்பிக் அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. பாரீஸில் 2024-ம் ஆண்டு நடக்கும் ஒலிம்பிக் போட்டியில் பிரேக் டான்ஸிங் நடனம் சேர்க்கப்படும் என்று சர்வதேச ஒலிம்பிக் குழு அறிவித்துள்ளது.
மேலும், ஸ்கேட் போர்டிங் (பலகையில் சறுக்குதல்), ஸ்போர்ட் கிளிம்பிங் (மலை ஏற்றம்), சர்பிங் (அலைச்சறுக்கு) ஆகிய விளையாட்டுகளும் பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் சேர்க்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டோக்கியோவில் நடப்பதாக இருந்த ஒலிம்பிக் போட்டியில் 3 விளையாட்டுப் போட்டிகள் அறிமுகப்படுத்தப்படுவதாக இருந்தன. ஆனால், கரோனா வைரஸ் பரவல் காரணமாக ஒலிம்பிக் போட்டி ஓராண்டு தாமதமாகியுள்ளது. 2021, ஜூன் 23-ம் தேதிதான் ஒலிம்பிக் தொடங்குகிறது.
டோக்கியோவில் மொத்தம் 339 பதக்கங்களுக்கான போட்டி நடப்பதாக இருந்தது. ஆனால், இது 10 போட்டிகள் பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் குறைக்கப்பட்டுள்ளது. இதில் குறிப்பாக பளு தூக்குதல், குத்துச்சண்டை போன்றவை பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் இடம் பெறாது.
பொதுவாக 2016 ரியோ ஒலிம்பிக் போட்டியில் பளு தூக்குதல் போட்டியில் பங்கேற்ற போட்டியாளர்களில் பாதியளவு போட்டியிட வேண்டும்.
அதாவது, பாரீஸ் ஒலிம்பிக்கில் பளு தூக்குதலில் 120 போட்டியாளர்கள் குறைந்தபட்சம் இருக்க வேண்டும். இல்லாவிட்டால் அந்தப் போட்டியைக் கைவிடலாம். அதுமட்டுமல்லாமல், பளு தூக்குதல் வீரர்களுக்கு இடையே ஊக்கமருந்து விவகாரமும் தீவிரமாக இருந்து வருவதால் அந்தப் போட்டி நீக்கப்பட்டுள்ளது.
அலைச்சறுக்கு விளையாட்டு பசிப் பெருங்கடலில் தஹிதி கடற்கரையில் 15 ஆயிரம் கி.மீ.க்கு மேல் நடத்தவும் சர்வதேச ஒலிம்பிக் சங்கம் சம்மதித்துள்ளது.