Last Updated : 08 Dec, 2020 03:13 AM

 

Published : 08 Dec 2020 03:13 AM
Last Updated : 08 Dec 2020 03:13 AM

விளையாட்டாய் சில கதைகள்: லாலாவுக்காக நடந்த கலாட்டா

இந்திய கிரிக்கெட் வரலாற்றில், தனி மனிதத் துதிபாடல் கலாச்சாரத்தைத் தொடங்கி வைத்தவர் லாலா அமர்நாத். தனக்காக பந்த் நடத்தும் அளவுக்கு இந்தியாவில் ரசிகர்களைப் பெற்றிருந்தார் லாலா அமர்நாத்.

1936-ம் ஆண்டு இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து நாட்டில் சுற்றுப்பயணம் செய்தது. இந்த சுற்றுப்பயணத்தின்போது இந்திய அணியின் நட்சத்திர ஆட்டக்காரராக லாலா அமர்நாத் இருந்தாலும், அவரை விடுத்து விஜயநகரம் மகராஜ்குமாருக்கு கேப்டன் பதவி வழங்கப்பட்டிருந்தது. இருவருக்கும் இடையில் அவ்வளவாக நட்பு இல்லை. லாலாவுக்கு ரசிகர்கள் மத்தியில் இருந்த புகழால் பொறாமையில் இருந்தார் மகராஜ்குமார். இந்த சூழலில் லார்ட்ஸ் மைதானத்தில், இங்கிலாந்து - இந்தியா இடையிலான டெஸ்ட் போட்டி நடந்தது. இதில் 4-வது பேட்ஸ்மேனாக ஆடவேண்டிய லாலா அமர்நாத்தை 7-வது பேட்ஸ்மேனாக ஆடவைத்தார் மகராஜ்குமார். இதனால் கோபமடைந்த லாலா அமர்நாத், காலில் அணிந்திருந்த பேடைக் கழற்றி கேப்டன் முன்பு வீசினார். இதனால் அவர் அணியில் இருந்து நீக்கப்பட்டார்.

இந்த தகவல் தெரிந்ததும் இந்தியாவில் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் கொந்தளித்தனர். மும்பை உள்ளிட்ட பல இடங்களில் இதைக் கண்டித்து பந்த் நடந்ததாக கூறப்படுகிறது. லாலா இந்தியாவுக்கு வரும் நாளில் அவரை வரவேற்க துறைமுகத்தில் பெரும் கூட்டம் கூடியது. லாலாவும் ரசிகர்களும் சந்தித்துக்கொண்டால், கலவரம் வெடிக்குமோ என்ற அச்சத்தால் ஆங்கிலேய அரசு, துறைமுகத்தின் வெளியிலேயே கப்பலை நிறுத்தி சிறு படகில் லாலாவை ஏற்றி ரகசிய இடத்துக்கு கொண்டு சென்றுள்ளது. ரசிகர்களையும், நிருபர்களையும் சந்திக்க முடியாதபடி சில நாட்களுக்கு அவர் தனி இடத்தில் வைக்கப்பட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x