

இந்திய ஹாக்கி வீரர் குர்பஜ் சிங் அணியில் கோஷ்டி பூசலை உருவாக்கியதாகவும், வீரர் களிடையே பிளவை ஏற்படுத்திய தாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து ஹாக்கி இந்தியா அமைப்பு, குர்பஜ்சிங்குக்கு 9 மாதம் போட்டிகளில் பங்கேற்க தடைவிதித்தது.
இதுதொடர்பாக பஞ் சாப் மற்றும் அரியானா உயர்நீதி மன்றத்தில் குர்பஜ் சிங் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி ராகேஷ் குமார் ஜெயின், குர்பஜ்சிங் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைக்கு இடைக்கால தடைவிதித்து கடந்த 19ம் தேதி உத்தரவிட்டார். இந்நிலையில் குர்பஜ் சிங் மீதான தடை நீக்கப் பட்டுள்ளதாக ஹாக்கி இந்தியா அமைப்பு நேற்று தெரிவித் துள்ளது.