Last Updated : 29 Nov, 2020 02:59 PM

 

Published : 29 Nov 2020 02:59 PM
Last Updated : 29 Nov 2020 02:59 PM

ஓராண்டுக்குப் பின் சர்வதேசப் போட்டியில் முதல் முறையாக பந்துவீசிய ஹர்திக் பாண்டியா

ஓராண்டு இடைவெளிக்குப் பின் இன்றைய ஆட்டத்தில் பந்துவீசிய இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா: படம் உதவி | ட்விட்டர்.

சிட்னி

இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா ஓராண்டுக்குப் பின் சர்வதேசப் போட்டியில் முதல் முறையாக ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இன்றைய 2-வது ஒருநாள் ஆட்டத்தில் பந்துவீசினார்.

டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 389 ரன்கள் எனும் இமாலய இலக்கை இந்திய அணிக்கு நிர்ணயித்துள்ளது. இந்தப் போட்டியிலும் இந்திய அணி சேஸிங் செய்வது என்பது கடினமானதுதான்.

கடந்த 2018-ம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்குப் பின் முதுகுவலி பிரச்சினையால் ஹர்திக் பாண்டியா அவதிப்பட்டு வந்தார். கடந்த ஆண்டு அக்டோபரில் ஹர்திக் பாண்டியா இங்கிலாந்தில் அறுவை சிகிச்சை செய்துகொண்டார்.

அறுவை சிகிச்சைக்குப் பின் இந்தியாவில் நடந்த வங்கதேசம், மே.இ.தீவுகள் தொடர், இலங்கைக்கு எதிரான டி20 தொடர், ஆஸி.க்கு எதிரான ஒருநாள் தொடர், நியூஸிலாந்து தொடர் ஆகியவற்றில் ஹர்திக் பாண்டியா பங்கேற்கவில்லை.

ஏறக்குறைய ஓராண்டாக பேட்டிங் மட்டுமே செய்து வந்த ஹர்திக் பாண்டியா முதல் முறையாக சர்வதேசப் போட்டியில் பந்துவீசினார். ஐபிஎல் தொடரில்கூட மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ஆடிய ஹர்திக் பாண்டியா பேட்டிங் மட்டுமே செய்தார். பந்துவீசவில்லை.

இந்நிலையில் ஓராண்டுக்குப் பின் முதல் முறையாக சர்வதேசப் போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இன்றைய 2-வது ஒருநாள் ஆட்டத்தில் ஹர்திக் பாண்டியா பந்துவீசினார்.

ஆஸ்திரேலியத் தொடரில் இந்திய அணியில் 6-வது பந்துவீச்சாளர், பகுதிநேரப் பந்துவீச்சாளர் இல்லாமல் தடுமாறி வருகிறது எனும் குற்றச்சாட்டும், நெருக்கடியும் அதிகரித்த நிலையில், ஹர்திக் பாண்டியா மாற்றப்பட்ட பந்துவீச்சு சைகையுடன் பந்துவீசினார்.

ஆல்ரவுண்டர் என்ற பெயரில் ஹர்திக் பாண்டியா இந்திய அணியில் இருந்தாலும், பந்துவீசும் அளவுக்கு உடல் தகுதியில்லை என்று கூறப்பட்டது. இதனால், 6-வது பந்துவீச்சாளர் இல்லாமல் முதல் போட்டியில் இந்திய அணி மோசமான தோல்வி அடைந்தது.

2-வது போட்டியிலும் இந்திய அணிக்கு 6-வது பந்துவீச்சாளர்கள் இல்லாத நிலையில் ஹர்திக் பாண்டியா பந்துவீச வேண்டியநிலை ஏற்பட்டது.

அறுவை சிகிச்சைக்குப் பின் தனது உடலில் அழுத்தம், வலியைக் குறைக்கும் வகையில், பந்துவீச்சு முறையில் மாற்றங்கள் செய்து ஹர்திக் பாண்டியா இன்று பந்துவீசினார்.

ஹர்திக் பாண்டியா இன்றைய ஆட்டத்தில் 4 ஓவர்கள் மட்டுமே வீசினாலும் 24 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார்.

முதல் ஓவரில் ஸ்டீவ் ஸ்மித், லாபுஷேன் இருவருக்கும் பந்துவீசி 5 ரன்கள் மட்டுமே ஹர்திக் பாண்டியா விட்டுக் கொடுத்தார். 2-வது ஓவரில் ஸ்லோ பால், நக்குல் பால் என மாறி மாறி வீசி ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களைத் திணறிவிட்ட ஹர்திக் பாண்டியா 4 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்தார்.

3-வது ஓவரை வீசிய ஹர்திக் பாண்டியா, பந்தை வைடாக வீசிய நிலையில் அதை ஸ்மித் அடிக்க முற்பட்ட போது, த்ரேட் மேன் திசையில் ஷமியிடம் கேட்ச் ஆனது. ஸ்மித் 104 ரன்களில் ஆட்டமிழந்தார். ஓராண்டுக்குப் பின் 4 ஓவர்கள் மட்டுமே ஹர்திக் பாண்டியா வீசினாலும் 24 ரன்கள் விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார்.

இன்னும் டி20 உலகக் கோப்பைப் போட்டிக்கு 10 மாதங்கள் மட்டுமே இருக்கும் நிலையில், நீண்டகால நோக்கோடு, மிகப்பெரிய இலக்கை மனதில் வைத்து பயிற்சி எடுத்துவருகிறேன் என்று சமீபத்தில் ஹர்திக் பாண்டியா தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x