நான் பேட் செய்யும்போது ராகுலிடம் மன்னிப்பு கேட்டேன்: மேக்ஸ்வெல்

நான் பேட் செய்யும்போது ராகுலிடம் மன்னிப்பு கேட்டேன்: மேக்ஸ்வெல்
Updated on
1 min read

ஆஸ்திரேலியா அணிக்காக சிறப்பாக விளையாடிய மேக்ஸ்வெல் தனது பேட்டிங்குக்காக ராகுலிடம் மன்னிப்பு கேட்டதாக நகைச்சுவையாக தெரிவித்தார்.

நேற்று இந்தியாவுக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் மேக்ஸ்வெல்லும், மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான போட்டியில் நியூசிலாந்து வீரர் ஜிம்மி நீஷமும் சிறப்பாக விளையாடினார்கள்.

இந்த நிலையில் இதனை குறிப்பிட்டு ஐபிஎல் போட்டியின் ரசிகர்கள் இந்திய வீரர் ராகுலை குறிப்பிட்டு ட்விட்டரில் கிண்டல் செய்தனர். மேக்ஸ்வெல், நீஷம் இருவரும் பஞ்சாப் அணிக்காக ஐபிஎல்லில் விளையாடுகிறார்கள்.அந்த அணியின் கேப்டனா ராகுல் உள்ளார்.
ஐபிஎல்லில் இருவரும் சிறப்பாக விளையாடவில்லை ஆனால் நேற்றைய போட்டிகளில் அவர்களது தேசிய அணிகளுக்காக சிறப்பாக விளையாடினார்கள்.. இதனைத் தொடர்ந்து ரசிகர்கள் ராகுலை ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டு நகைசுவையாக கேள்வி எழுப்பினர்.

இதில் வருண் என்ற நெட்டிசன் மேக்ஸ்வெல் மற்றும் ஜிம்மி நீஷம் ஆகியோரின் ஆட்டத்தை பார்த்தப் பிறகு ராகுலின் நிலை என்று ஒரு மீம் ஒன்றை பகிர்ந்திருந்தார்.

இதனை குறிப்பிட்டு நீஷம்,” இது நல்ல மீம்” என்று மேக்ஸ்வெல்லை குறிப்பிட்டார்.

இதற்கு” நான் பேட் செய்யும்போது ராகுலிடம் மன்னிப்பு கேட்டேன்” என்று மேக்ஸ்வெல் நகைச்சுவையாக பதிலளித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in