

சர்வதேச பாட்மிண்டன் தரவரிசையில் நம்பர் 1 இடத்தில் இருந்த இந்தியாவின் சாய்னா நெவால் 2வது இடத்துக்கு தள்ளப்பட்டார்.
ஜப்பான் ஒபன், டென்மார்க் ஒபனில் 2வது சுற்றுகளிலேயே வெளியேறியதால் சாய்னாவுக்கு இந்த சரிவு ஏற்பட்டுள்ளது. அதேவேளையில் ஆல் இங்கிலாந்து மற்றும் உலக சாம்பியன் பட்டம் வென்ற ஸ்பெயினின் கரோலினா மரின் முதலிடத்தை பிடித்துள்ளார்.
மற்றொரு இந்திய வீராங்களை பி.வி.சிந்து 13வது இடத்திலேயே நீடிக்கிறார்.