

உஹான் ஓபன் டென்னிஸ் போட்டியின் மகளிர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சானியா மிர்சா-ஸ்விட்சர்லாந்தின் மார்ட்டினா ஹிங்கிஸ் ஜோடி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.
சீனாவின் உஹான் நகரில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் நேற்று நடைபெற்ற காலிறுதியில் போட்டித் தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் சானியா-மார்ட்டினா ஜோடி 6-2, 6-2 என்ற நேர் செட்களில் போட்டித் தரவரிசையில் 5-வது இடத்தில் இருந்த அமெரிக்காவின் ரகேல் காப்ஸ்-அபிகெய்ல் ஸ்பியர்ஸ் ஜோடியை தோற்கடித்தது. இந்த ஆண்டில் தொடர்ச்சியாக ஆதிக்கம் செலுத்தி வரும் சானியா-மார்ட்டினா ஜோடி விம்பிள்டன், அமெரிக்க ஓபன் என இரு கிராண்ட்ஸ்லாம் பட்டங்களையும் வென்றுள்ளது.