Published : 25 Nov 2020 03:14 AM
Last Updated : 25 Nov 2020 03:14 AM

கங்குலிக்கு 4 மாதங்களில் 22 முறை கரோனா பரிசோதனை: செய்தியாளர்கள் சந்திப்பில் தகவல்

கடந்த 4 மாதங்களில் 22 முறை கரோனா பரிசோதனைகள் மேற்கொண்டதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவரும் முன்னாள் கேப்டனுமான சவுரவ் கங்குலி தெரிவித்தார்.

கரோனா வைரஸ் தொற்றுஅச்சுறுத்தலுக்கு இடையே ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரின் 13-வது சீசன் போட்டிகளைஐக்கிய அரபு அமீரகத்தில் சமீபத்தில் வெற்றிகரமாக நடத்தி முடித்தது பிசிசிஐ. இந்த தொடரைவெற்றிகரமாக நடத்தி முடித்ததில் பிசிசிஐ-யின் தலைவர் சவுரவ் கங்குலியின் பணி அளப்பரியது. இந்நிலையில் ஜூம் செயலி வழியாக நேற்று நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் கங்குலி கூறியதாவது:

கடந்த நான்கரை மாதங்களில்நான் 22 முறை கரோனா பரிசோதனை மேற்கொண்டேன். இதில் ஒரு முறை கூட முடிவு நேர்மறையாக வரவில்லை. என்னை சுற்றி வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் இருந்ததால் நான் பரிசோதனைகள் மேற்கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

ஐக்கிய அரபு அமீரகத்தில் ஐபிஎல் தொடரை வெற்றிகரமாக பிசிசிஐ குழு நடத்தியது பெருமையாக உள்ளது. 14-வது சீசன்போட்டி இந்தியாவில் நடக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தில் நாங்கள் 400 பேர் உயிர் பாதுகாப்பு வளையத்தில் இருந்தோம். எல்லோரும்பாதுகாப்பாகவும் ஆரோக்கியமாகவும் இருப்பதை உறுதி செய்வதற்காக இரண்டரை மாதகாலத்தில் 30 முதல் 40 ஆயிரம்சோதனைகள் மேற்கொள்ளப் பட்டன.

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணியின் தனிமைப்படுத்துதல் காலம் நேற்றுடன் (நவ.24)முடிவடைந்தது. அனைத்து வீரர்களும் உடற்தகுதியுடன் இருக் கிறார்கள்.

உள்ளூர் கிரிக்கெட் சீசன் விரைவில் தொடங்க உள்ளது. அடுத்தவருட தொடக்கத்தில் இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 4 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டி, 5 டி20 ஆட்டங்கள் கொண்ட முழுமையான தொட ரில் பங்கேற்க உள்ளது.

கரோனா வைரஸ் தொற்றின்2-வது அலை குறித்து பலர்,பேசிவருகிறார்கள். மும்பை, டெல்லியில் வைரஸ் தொற்றால்பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக கேள்விப்பட்டேன். எனவே கவனமாக இருக்க வேண்டும்.

இவ்வாறு கங்குலி கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x