Last Updated : 23 Nov, 2020 03:11 AM

 

Published : 23 Nov 2020 03:11 AM
Last Updated : 23 Nov 2020 03:11 AM

விளையாட்டாய் சில கதைகள்: நம்பர் 1 கிரிக்கெட் தம்பதி

டென்னிஸ், தடகளம், நீச்சல் போன்ற துறைகளில் உள்ள சர்வதேச வீரர், வீராங்கனைகள் தங்களுக்குள் காதலித்து திருமணம் செய்துகொள்வது அடிக்கடி நடக்கும் விஷயமாக உள்ளது. ஆனால் கிரிக்கெட்டில் இது குறைவு. இந்தச் சூழலில் சர்வதேச கிரிக்கெட் உலகின் ஒரே காதல் தம்பதியாக வலம் வருகிறார்கள் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளரான மிட்செல் ஸ்டார்க்கும், அந்நாட்டு பெண்கள் அணியின் விக்கெட் கீப்பரான அலிஸா ஹீலியும்.

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் ஆடுவதற்கு முன்பே, அதாவது ஸ்டார்க்கின் 9-வது வயதிலேயே அவருக்கு அறிமுகமாகி இருக்கிறார் அலிஸா ஹீலி. பிரபல ஆஸ்திரேலிய விக்கெட் கீப்பரான இயான் ஹீலியின் மருமகள்தான் அலிஸா ஹீலி. தன் மாமாவைப் பின்பற்றி தானும் விக்கெட் கீப்பராக விரும்பிய அலிஸா, சிட்னி வடக்கு மாவட்ட கிரிக்கெட் சங்கத்தில் இணைய, அங்கேதான் ஸ்டார்க்கை முதல்முறையாக சந்தித்துள்ளார்.

இப்போது வேகப்பந்து வீச்சாளராக உள்ள ஸ்டார்க், அப்போது சிட்னி வடக்கு மாவட்ட கிரிக்கெட் சங்கத்தில் விக்கெட் கீப்பராக பயிற்சி பெற்று வந்துள்ளார். இருவரும் சிறுவயதில் ஒன்றாக பயிற்சி பெற, காதல் தீ பற்றிக்கொண்டுள்ளது. பிற்காலத்தில் ஆஸ்திரேலிய மகளிர் அணியில் விக்கெட் கீப்பராக அலிஸா இணைய, வேகப்பந்து வீச்சாளராக மாறி ஆஸ்திரேலிய அணியில் இடம் பிடித்துள்ளார் மிட்செல் ஸ்டார்க். இருவரின் பாதை மாறினாலும், காதல் மாறவில்லை. இதைத் தொடர்ந்து கடந்த 2016-ம் ஆண்டில் அலிஸாவை மணமுடித்துள்ளார் ஸ்டார்க்.

இருவரும் தொடர்ந்து கிரிக்கெட் போட்டிகளில் ஆடுவதால், இந்த தம்பதி ஒன்றாக இருக்கும் நேரம் மிகவும் குறைவு. அலிஸா கிரிக்கெட் போட்டிகளில் ஆடும் நேரத்தில் ஸ்டார்க் வீட்டிலும், அலிஸா வீட்டில் இருக்கும் நேரங்களில் ஸ்டார்க் கிரிக்கெட் போட்டிகளில் ஆடுவதிலும் பிஸியாக இருப்பதால் இவர்கள் சந்தித்துக் கொள்ளும் நேரம் மிகவும் குறைவு. அதனால்தானோ என்னவோ எந்த சண்டை சச்சரவும் இல்லாமல் நிம்மதியாக வாழ்ந்து வருகிறது இந்த ஜோடி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x