Published : 22 Nov 2020 11:36 AM
Last Updated : 22 Nov 2020 11:36 AM

‘கவாஸ்கர் தனது மகனை பலமாதங்களாகப் பார்க்காமல் விளையாடினார்’: விராட் கோலி விடுப்பு குறித்து கபில் தேவ் கருத்து

விராட் கோலி அவரின் மனைவி அனுஷ்கா சர்மா : கோப்புப்படம்

புதுடெல்லி


சுனில் கவாஸ்கர் தனது பிறந்த குழந்தையை பல மாதங்களாகப் பார்க்காமல் தொடர்ந்து கிரிக்கெட் விளையாடினார் என்று விராட் கோலியின் விடுப்பு குறித்த கேள்விக்கு ஜாம்பவான் கபில் தேவ் பதில் அளித்துள்ளார்.

ஆஸ்திரேலியாவுக்கு 2 மாதங்கள் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இதில் டி20, ஒருநாள் தொடர் மற்றும் முதல் டெஸ்ட் போட்டியில் மட்டுமே விராட் கோலி விளையாடுவார். மீதமுள்ள 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாட கோலி விளையாடமாட்டார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விராட் கோலியின் மனைவி அனுஷ்கா சர்மாவுக்கு முதல் பிரசவம் என்பதால் அவருடன் இருக்க வேண்டும் என்பதால், கோலிக்கு விடுப்பு அளிக்கப்பட்டுள்ளது.

விராட் கோலியின் இந்த முடிவுக்கு பல்வேறு கிரிக்கெட் வீரர்கள் ஆதரவும், வரவேற்பும் தெரிவித்துள்ளார்கள். ஆனால், இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ், மாறுபட்ட கருத்து தெரிவித்துள்ளார்.

இந்துஸ்தான் டைம்ஸ் நாளேட்டின் சார்பில் நடந்த மாநாட்டில், கபில் தேவ் பங்கேற்றார். அப்போது, விளையாட்டு ஆசிரியர் அயாஸ் மேமனுக்கு அளித்தபேட்டியின்போது, விராட் கோலியின் விடுப்பு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு கபில் தேவ் அளித்த பதில்:

விராட் கோலிக்கு தந்தை எனும் புதிய பதவி கிடைக்கப்போவது குறித்து மகிழ்ச்சி அடைகிறேன். ஆனால், இந்தியாவுக்கு கோலி சென்றுவிட்டு மீண்டும் ஆஸ்திரேலியாவுக்கு வருவது என்பது சாத்தியமில்லாதது. அது உறுதியாகத் தெரியும்.

ஆனால், என்னைப் பொருத்தவரை சுனில் கவாஸ்கருக்கு மகன் பிறந்தபின், அந்த குழந்தையை பலமாதங்களாகப் பார்க்காமல்அவர் தொடர்ந்து கிரிக்கெட் விளையாடினார். அது வித்தியமாசமான நிகழ்வு.
ஆனால், கோலியைப் பற்றிப் பேசினால், கோலி அவரின் தந்தை இறந்தபின் மறுநாளே கிரிக்கெட் விளையாட களத்துக்கு வந்துவிட்டார்.

இன்று அவருக்கு பிறக்கப்போகும் முதல் குழந்தைக்காக கோலி விடுப்பு எடுக்கிறார். அருமையான தருணம். இன்றுள்ள கிரிக்கெட் வீரர்களுக்கு பல்வேறு வசதிகளை, சிறப்பு அம்சங்களை நவீன கால கிரிக்கெட் வழங்குவது மகிழ்ச்சியாகவும், வியப்பாகவும் இருக்கிறது.

அணி நிர்வாகம் நினைத்தால் ஒரு சிறிய விமானத்தை வாங்கி, கோலியை இந்தியாவுக்கு அனுப்பிவிட்டு 3 நாட்களில் திரும்பிவிடச் செய்ய முடியும். குடும்பத்துக்காக செலவிடும் கோலியைப் பார்க்க பெருமையாக இருக்கிறது. கிரிக்கெட் மீது தீராத காதல் கோலிக்கு இருப்பதை புரிந்துகொள்கிறேன். அதையும் தாண்டி குழந்தையின் மீதும் இருக்கிறது

இவ்வாறு கபில் தேவ் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x