நெதர்லாந்து ஓபன் 3-வது சுற்றில் ஜெயராம், குருசாய் தத்

நெதர்லாந்து ஓபன் 3-வது சுற்றில் ஜெயராம், குருசாய் தத்
Updated on
1 min read

நெதர்லாந்து ஓபன் கிராண்ட்ப்ரீ பாட்மிண்டன் போட்டியில் நடப்பு சாம்பியனான இந்தியாவின் அஜய் ஜெயராம், குருசாய் தத் ஆகியோர் காலிறுதிக்கு முந்தைய சுற்றான 3-வது சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.

நெதர்லாந்தின் அல்மீர் நகரில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் நேற்று நடந்த 2-வது சுற்றில் உலகின் 25-ம் நிலை வீரரான ஜெயராம் 21-14, 21-10 என்ற நேர் செட்களில் ஜெர்மனியின் பாபியன் ரோத்தை வீழ்த்தினார். ஜெயராம் தனது 3-வது சுற்றில் பின்லாந்தின் காஸ்பெர் லெஹிகோய்னெனை சந்திக்கிறார்.

போட்டித் தரவரிசையில் 9-வது இடத்தில் இருக்கும் குருசாய் தத் 21-14, 21-19 என்ற நேர் செட்களில் சீன தைபேவின் சன் வெய் சென்னை தோற்கடித்தார். குரு சாய் தத் தனது காலிறுதிக்கு முந்தைய சுற்றில் உக்ரைனின் டிமிட்ரோவ் ஜவாட்ஸ்கையை சந்திக்கிறார்.

அதேநேரத்தில் போட்டித் தரவரிசையில் 4-வது இடத்தில் இருந்த இந்தியாவின் சாய் பிரணீத் 15-21, 21-7, 12-21 என்ற செட் கணக்கில் டென்மார்க்கின் ராஸ்மஸ் பிளாட்பெர்க்கிடம் தோல்வி கண்டு போட்டியிலிருந்து வெளியேறினார்.

மகளிர் ஒற்றையர் முதல் சுற்றில் இந்தியாவின் பி.வி.துளசி 20-22, 21-15, 21-16 என்ற செட் கணக்கில் நெதர்லாந்தின் கெய்ல் மஹுலெட்டை வீழ்த்தினார். துளசி தனது 2-வது சுற்றில் அயர்லாந்தின் க்ளோ மேகீயை சந்திக்கிறார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in