

அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி சாம்பியனாக அதிக வாய்ப்புள்ளது என முன்னாள் மேற்கிந்தியத் தீவுகள் கேப்டன் பிரையன் லாரா தெரிவித்துள்ளார்.
டி20 உலகக் கோப்பை போட்டி அடுத்த ஆண்டு இந்தியாவில் நடை பெறவுள்ள நிலையில் இது தொடர் பாக அவர் மேலும் கூறியதாவது:
சொந்த மண்ணில் விளையாடும் போது இந்திய அணி அபாயகர மான அணியாக திகழும். அதை 2011 உலகக் கோப்பையை வென்ற போதே இந்திய அணி நிரூபித்தது. அந்த அணியில் அற்புதமான வீரர் களும், ஆட்டத்தின் போக்கை மாற் றும் திறன் படைத்த திறமைசாலி களும் உள்ளனர். எனவே அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணி சாம்பியன் ஆகும் என எதிர்பார்க்கிறேன். சொந்த மண்ணில் விளையாடும்போது நெருக்கடி அதிகமாக இருக்கும் என்பது எனக்கு தெரியும். இந்திய வீரர்கள் மிகப்பெரிய பேட்ஸ்மேன் களாக மாறியிருக்கிறார்கள். அதனால் உலகக் கோப்பையை வெல்ல அந்த அணிக்கு அதிக வாய்ப்புள்ளதாக நம்புகிறேன் என்றார்.
மேற்கிந்தியத் தீவுகள் அணி யின் ஆலோசகராக வரவேண்டும் என்று எப்போதாவது நினைத்திருக் கிறீர்களா என லாராவிடம் கேட்ட போது, “நான் பயிற்சியாளராகவோ அல்லது ஆலோசகராகவோ இருந் தால் அதனால் பெரிய அளவில் மாற்றம் ஏற்படும் என நினைக்க வில்லை. எங்கள் கிரிக்கெட்டில் இருக்கும் பிரச்சினை மிக ஆழமாக வேரூன்றிவிட்டதாக நினைக்கிறேன்.
போதிய அளவுக்கு உள்கட் டமைப்பு வசதிகள் இல்லை. நிர்வாக ரீதியாக நாங்கள் சரியாக செயல்படவில்லை. அதனால் தனிப்பட்ட ஒருவரால் மாயாஜாலம் நிகழ்த்தவோ அல்லது அணியின் செயல்பாட்டில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்றோ நான் நினைக்கவில்லை” என்றார்.
நீங்கள் உங்கள் கிரிக்கெட் வாழ்க்கையில் மிக முன்னதாகவே ஓய்வு பெற்றுவீட்டீர்களோ என லாராவிடம் கேட்டபோது, “நான் சில சாதனைகளை படைத்திருக் கலாம். ஆனால் நான் சாதனை களுக்காக ஒருபோதும் பேட் செய்ததில்லை. 12,000 ரன்கள் குவித்ததுகூட முக்கியமல்ல. ஓய்வு பெறுவதற்கு இது சரியான தருணம் என்பதை உணர்ந்தபோது தான் ஓய்வு பெற்றேன்” என்றார்.