ராயுடுவை ஒப்பிடும் போது ரஹானே எவ்வளவோ விதத்தில் சிறந்த வீரர்: அசாருதீன்

ராயுடுவை ஒப்பிடும் போது ரஹானே எவ்வளவோ விதத்தில் சிறந்த வீரர்: அசாருதீன்
Updated on
1 min read

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக இந்தியா தோல்வி அடைந்த டி20 கிரிக்கெட் தொடரில் ரஹானேயை உட்கார வைத்தது பற்றி அசாருதீன் சாடியுள்ளார்.

அதாவது ராயுடுவுக்கு பதில் ரஹானே எவ்வளவோ விதங்களில் சிறந்த வீரர் என்கிறார் அசார்.

“ரஹானேயின் உத்திகளில் எந்த வித பிரச்சினையும் இல்லை. அவரது பொறுமையிலும் பிரச்சினையல்ல. ஆனால் டி20 தொடரில் அவரை உட்கார வைத்தது துரதிர்ஷ்டவசமானது. கடைசியில் அணியில் எடுக்கின்றனர் ஆனால் இந்தியா ஏற்கெனவே தோல்வியடைந்து விட்டது.

ராயுடுவுக்கு மதிப்பளிக்கிறேன் என்பதை தெரிவித்துக் கொள்வதோடு, அஜிங்கிய ரஹானே அவரை விடவும் சிறந்த வீரர் என்பதையும் கூறுகிறேன். விராட் கோலிக்குப் பிறகு சிறந்த வீரரான ரஹானேயை எப்படி உட்கார வைக்க முடியும்?

ரஹானே ஆக்ரோஷமான பேட்ஸ்மேனாவார், அவரிடம் அனைத்து விதமான ஷாட்களும் உள்ளன. அவர் இன்னும் முன்னாள் இறங்க வேண்டும்.

தோனி, அவர் அறியப்படும் விதத்தில் ஆடவில்லை. ஒரு கேப்டனாக அவர் மீது அழுத்தம் கூடி வருகிறது. அவர் சரியாக ஆடவில்லையெனில் தேர்வுக்குழுவினர் அவரைப் பற்றி பரிசீலிக்க வேண்டும். ஏதாவது தாக்கம் ஏற்படுத்த வேண்டுமென்றால் அவர் இன்னும் முன்னால் களமிறங்க வேண்டும்.

ஒரு கேப்டனிடம் மற்ற வீரர்கள் என்ன எதிர்ப்பார்க்கின்றனரோ, அதனை தோனி செய்தாலே மற்றவர்களும் அவரை பின் தொடர்வர்.

எனக்கு ‘பினிஷர்’ என்ற வார்த்தைப் பிரயோகம் பற்றி புரியவில்லை. அனைவரிடத்திலும் வெற்றியைப் பெறுவதற்கான திறன்கள் அவசியம். அதாவது வெற்றி பெற 50 ரன்கள் இருக்கும் போது, ஒருவர் 70 ரன்கள் எடுத்து ஆடிவரும் பட்சத்தில் மற்றவரிடத்தில் வெற்றி பெறும் முடிவை விட வேண்டுமா? 70 ரன்களில் கிரீஸில் நீங்கள் இருந்தால், நீங்கள்தான் போட்டியை முடித்துக் கொடுக்க வேண்டும்.

எனவே இந்த பினிஷர் என்ற வார்த்தை அதிமதிப்பீடு செய்யப்படுகிறதோ என்று நான் சந்தேகிக்கிறேன்.”இவ்வாறு கூறினார் அசாருதீன்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in