Published : 11 Nov 2020 09:58 AM
Last Updated : 11 Nov 2020 09:58 AM

யாரையும் குச்சியை வைத்துக் கொண்டு மிரட்டும் கேப்டன் அல்ல நான்: சாம்பியன் மும்பை கேப்டன் ரோஹித் சர்மா சூசகம்

துபாயில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் 2020 தொடரின் இறுதிப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி முதல் முறையாக இறுதிக்குத் தகுதி பெற்ற டெல்லி கேப்பிடல்ஸை வீழ்த்தி 5வது முறையாக ஐபிஎல் சாம்பியன்களாயினர்.

ரோஹித் சர்மா இதனையடுத்து ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலுக்குக் கூறும்போது, “ஒட்டுமொத்த தொடரிலும் ஆடிய விதம் திருப்தி அளிக்கிறது. வெற்றி பெறுவதை ஒரு பழக்காமாக மாற்றுவது பற்றி ஆரம்பத்திலேயே கூறினோம். இதற்கு மேல் வீரர்களிடம் என்ன எதிர்பார்க்க முடியும்?

தொடரின் முதல் பந்திலிருந்து இந்த போட்டி வரை நாங்கள் குறிக்கோளுடன் இருந்தோம். திரைக்குப் பின்னால் பணியாற்றவர்களின் உழைப்புக்கும் நன்றி. ஐபிஎல் தொடங்குவதற்கு முன்னரே நாங்கள் பயிற்சியைத் தொடங்கி விட்டோம். என்ன தவறு செய்கிறோம், என்ன முன்னேற்றம் தேவை என்பதை அவ்வப்போது ஆராய்ந்தோம்.

சரியான அணியைத் தேர்வு செய்து ஒரு அணியின் கேப்டனாக அமைதியுடன் இருக்க வேண்டும். யாரையும் குச்சியை வைத்து மிரட்டி வேலை வாங்கும் கேப்டனல்ல நான். வீரர்களுக்கு நம்பிக்கை அளிப்பதைத்தான் நான் செய்வேன், செய்தேன்.

ஹர்திக், குருணால், பொலார்டின் பங்குகளை சுழற்சி முறையில் பயன்படுத்தினோம். பவுலிங்கிலும் அப்படித்தான் சாஹருக்கு துரதிர்ஷ்டம், உத்தி ரீதியாக ஜெயந்த் யாதவ் தேவைப்பட்டார்.

ஒரு சிறந்த அணியாகத் தேர்வு செய்ய லெவனை மாற்றும் போது அது யாரையும் பெரிய அளவில் வீழ்த்தி விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

இஷான் கிஷன், சூரிய குமார் யாதவ் பிரமாதம், நான் என் விக்கெட்டை அவருக்காக தியாகம் செய்திருக்க வேண்டும். நம்ப முடியாத ஷாட்களை ஆடினார் சூரியா. இவர்கள் இருவரையும் நாம் தொடர்ந்து ஊக்குவித்ததன் விளைவுதான் அவர்கள் இப்படிப்பட்ட ஆட்டத்தை இந்தத் தொடரில் ஆடினார்கள்.

ரசிகர்கள்தான் எங்களை ஊக்குவிக்கின்றனர், இந்த முறை அது இல்லாமல் போய்விட்டது, வான்கடேயில் ஆடாததை இழந்தது போல் உணர்கிறேன்” என்றார் ரோஹித் சர்மா.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x