

ஐஎஸ்எல் போட்டியில் படோர்டா வில் நேற்று நடைபெற்ற ஆட் டத்தில் கோவா எப்.சி.-கேரளா பிளாஸ்டர்ஸ் அணிகள் மோதின. கோவா 4-3-3 என்ற பார்மட்டிலும், கேரளா 5-3-2 என்ற பார்மட்டிலும் களமிறங்கின. ஆட்டத்தின் 24வது நிமிடத்தில் கேரளா முதல் கோலை அடித்தது. அந்த அணியின் ராபி தனக்கு கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி கோல் அடித்தார். முதல் பாதியின் முடிவில் கோவா அணி பதிலடி கொடுத்தது.
45வது நிமிடத்தில் அந்த அணியின் லியோ முரா கோல் அடித்தார். இதனால் முதல் பாதியில் 1-1 என சமநிலை இருந் தது. 84வது நிமிடத்தில் கோவா 2வது கோலை அடித்தது. இந்த கோலை அந்த அணியின் கிர கோரி அடித்தார்.
அதன் பின்னர் இரு அணிகளும் கோல் அடிக்க வில்லை. முடிவில் 2-1 என்ற கோல் கணக்கில் கோவா அணி வெற்றி பெற்றது.