

தொடைப்பகுதி காயம் காரணமாக ஆஸ்திரேலியா செல்லும் இந்திய அணியில் எந்த அணியிலும் ரோஹித் சர்மா பெயர் இடம்பெறவில்லை.
இதனையடுத்து பெரிய சர்ச்சைகள் மூண்டன, காரணம் அவர் தனக்கு காயம் குணமடைந்து விட்டது என்று கூறி ஐபிஎல் தொடரில் ஆடி வருகிறார்.
அவர் காயம் விளையாடினால் சீரியசாகும் என்று இந்திய இந்திய அணி உடற்கோப்பு மருத்துவர் நிதின் படேல் அறிக்கையில் தெரிவித்திருந்தார். இதை வைத்துதான் தேர்வு செய்யவில்லை என்று ரவி சாஸ்திரியும் கங்குலியும் விளக்கம் அளித்தனர்.
இந்நிலையில் ஜனவரி மாதம் குறைந்தது 2 டெஸ்ட் போட்டிகளிலாவது தன்னால் ஆட முடியாது என்று கேப்டன் விராட் கோலி பிசிசிஐ-க்கு எழுதிக் கொடுத்ததையடுத்து ரோஹித் சர்மா அனுப்பப்படுவதாக தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில் பிசிசிஐ தரப்பு அதிகாரி ஒருவர் ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு கூறும்போது, “ரோஹித் சர்மா தனது உடற்தகுதியை முழுதுமாக நிரூபிக்காமல் ஆஸ்திரேலியா செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்.
டீம் இந்தியா பிசியோ நிதின் படேல், ரோஹித் சர்மாவுக்கு உடற்தகுதி சான்றிதழ் அளித்தால்தான் ரோஹித் ஆஸ்திரேலியா செல்ல முடியும், இதோடு தேசிய கிரிக்கெட் அகாடமியும் ரோஹித் உடற்தகுதியை உறுதி செய்ய வேண்டும்.
ரோஹித் டெஸ்ட் தொடருக்குள் உடற்தகுதி பெறுவார் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். விராட் கோலி தன்னால் ஜனவரி மாதம் 2 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்க முடியாது என்று பிசிசிஐயிடம் விடுப்பு கோரியுள்ளதையடுத்து ரோஹித் உடற்தகுதி பெறுவது அவசியம்” என்று கூறியதாக தெரிகிறது.