Published : 09 Nov 2020 09:35 AM
Last Updated : 09 Nov 2020 09:35 AM

எல்லோரும்  ‘பிக்-3’-க்குத்தான் வாய்ப்பு என்றனர்;  எங்களை பொருட்படுத்தவில்லை : டேவிட் வார்னர்

சன் ரைசர்ஸ் அணி இந்த ஐபிஎல் தொடரில் பின் தங்கியிருந்த நிலையிலிருந்து பிற்பகுதியில் பிரமாதமாக ஆடி ப்ளே ஆஃப் சுற்று வரை வந்து வெளியேறியது பலருக்கும் ஆச்சரியமே.

கடைசியில் 4 போட்டிகளை வென்றது, இதில் கிங்ஸ் லெவன், கொல்கத்தா, பெரிய மீன் விராட் கோலியின் ஆர்சிபி ஆகியவை வெளியேற்றம் கண்டன.

நேற்று நடந்த போட்டியிலும் முக்கியத் தருணங்களை சன் ரைசர்ஸ் இழந்தது. 4 கேட்ச்களை விட்டது, கேன் வில்லியம்சன், பிரியம் கார்க், அப்துல் சமத், ரஷீத் கான் ஏறக்குறைய போட்டியை வெற்றி பெற்றுக் கொடுத்திருப்பார்கள், ஆகவே சன் ரைசர்ஸ் போராடி மேலே வந்து கடைசியில் போராடித்தான் வெளியேறியுள்ளது.

இந்நிலையில் ஆட்டம் முடிந்த பிறகு சன் ரைசர்ஸ் ஹைதராபாத் கேப்டன் டேவிட் வார்னர் கூறியதாவது:

முதலில் என்னவென்றால், யாரும் எங்களுக்கு ஒரு வாய்ப்பிருப்பதாகக் கருதவில்லை. அனைவரும் ‘பிக் 3’ பற்றிதான் பேசினார்கள். அதாவது மும்பை, ஆர்சிபி, டெல்லி என்றனர். ஆகவே எங்கள் ஆட்டம் பற்றி நாங்கள் இப்போது பெருமை கொள்ளவே செய்கிறோம்.

நடராஜன், மணீஷ் பாண்டே, ரஷீத் கான் அபாரமாக ஆடினார்கள். தொடரின் பின் பாதியில் ஆடியது போல்தான் எப்போதும் ஆட விரும்பும் அணியாவோம் நாங்கள்.

கேட்ச்களை விட்டுக் கொண்டிருந்தால் தொடர்களை வெல்ல முடியாது. பவுலிங், பேட்டிங்கில் முன்னேறினோம், ஆனால் பீல்டிங்கில் அணுகுமுறையினால் தோற்றோம்.

ஆம் சஹா காயமடைந்தார், காயங்களை ஒன்றும் செய்ய முடியாது. ஆனால் எங்கள் அணியை யாரும் பொருட்படுத்தவில்லை. யாரும் எங்களுக்கு வாய்ப்பு இருப்பதாகக் கருதவில்லை, எனவே இது எங்களுக்கு இது நல்ல தொடர்தான், என்றார் வார்னர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x